(1). குறிப்பாக பாம்புகளுக்கு அதிர்வுகளை உணரும் நுண்ணாற்றல் (1)
(2) மிகவும் விருத்தி அடைந்து இருப்பது விஞ்ஞானிகளினால் அவதானிக்கப்பட்டு இருக்கிறது. பாரிய பூமி அதிர்ச்சி அல்லது சுனாமி ஏற்படுவதற்கு பல தினங்களுக்கு முன்னரேயே பல சிறிய அதிர்வுகள் பூமித்தட்டில் ஏற்படுகின்றன. மேலும் 2014 இல் புவியியலாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் இலங்கை மற்றும் சூழ்ந்திருக்கும் இந்து சமுத்திர பகுதியும் கடந்த காலத்தை போலல்லாது அதிகரித்த பூமி அதிர்ச்சி மற்றும் சுனாமி தாக்கத்துக்கு உட்படக்கூடிய அபாயத்தில் இருப்பதைக் காட்டுகின்றன
(3). இதைவிட இந்திய வானிலை அறிக்கையின்படி அந்தமான் தீவுகளை அண்டிய பகுதியில் தாழமுக்கம் ஏற்பட்டு வருவதாகவும் அடுத்த சில தினங்களில் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளை அண்டிய பிரதேசங்களில் கடும் மழை பொழியும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது
(4). எனவே அடுத்த சில தினங்களுக்கு வடக்கு கிழக்கில் மீனவர்கள் மற்றும் சுனாமியினால் தாக்கப்படக் கூடிய கடல் கரையை அண்டிய பகுதிகளில் வசிப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவேண்டும். அடுத்த சில தினங்களுக்கு மீன் பிடிக்க செல்வதை தவிர்ப்பது பாதுகாப்பானது என்று கருத வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. 2016 ம் ஆண்டு வெளியிடப்பட்ட வறுமைக்கான புள்ளிவிபரங்களின் படி மட்டக்களப்பில் தமிழர்கள் ஏழ்மையில் உழல்வதாக காட்டும் நிலையில்
(5) வாழ்வாதாரம் இன்றி பாதிக்கப்பட்டுள்ள இந்த மீனவர்களுக்கு உதவுமாறு தமிழர் பிரநிதிகளை கேட்டுக் கொள்ளும் அதே வேளையில் அனைத்து துறைசார் நிபுணர்களையும் கிழக்கில் அனர்த்தம் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு பணிவாக கேட்டுக் கொள்கிறேன்.