Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

Trans-Pacific Partnership : அமெரிக்காவின் ஒப்புதல் வாக்குமூலம் – கலந்துரையாடல்

TPP_final“Trans-Pacific Partnership : அமெரிக்காவின் ஒப்புதல் வாக்குமூலம்” என்ற தலைப்பில் இவ்வாரம் 04-02-2016 வியாழக் கிழமையன்று மாலை 6:30 மணிக்கு 121, ஹம்டன் ஒழுங்கை, வெள்ளவத்தையில் அமைந்துள்ள தேசிய கலை இலக்கியப் பேரவை மண்டபத்தில் சமூக விஞ்ஞானக் கற்கை வட்டம் கலந்துரையாடவுள்ளது.

பலநாட்களாக மூடிய அறைக்குள் உருவாக்கப்பட்டு உரையாடப்பட்டுவந்த இந்த ஒப்பந்தம் பல்வேறு எதிர்ப்புக்களுக்குப் பிறகு பொதுவிற்கு வந்திருக்கிறது. உலக நாடுகள் – குறிப்பாக ஆசிய நாடுகள் – தமது நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்பிற்கான உள்நாட்டு ஒழுங்குமுறைகளையும் சட்டங்களையும் வகுப்பது அமெரிக்க மக்களின் நல்வாழ்வுக்கு எதிரானது என்று வெளிப்படையாகவே அமெரிக்க அரசு அறிவிக்கிறது,

நாடுகளின் பொருளாதாரச் சட்டங்ளை அமெரிக்காவுக்குச் சாதகமானதாக மாற்றியமைக்கும் பலம்பொருந்திய நடவடிக்கையாக இவ்வொப்பந்தத்தை அமெரிக்கா அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதுதவிர ஏராளமான தீங்குகளை மற்ற நாடுகளுக்கும் உலக மக்களும் ஏற்படுத்தவல்ல இவ்வொப்பந்தம் பற்றிக் கலந்துரையாடி அறிந்துகொள்வதற்கு அனைவரையும் அழைக்கிறது சமூக விஞ்ஞானக் கற்கை வட்டம்.

எம்மைச் சூழ நிகழும் நடப்புக்களை ஆழமாகக் கற்றுக்கொள்வதன் மூலம் சமூக மாற்றத்துக்கான அடித்தளத்தை இடும் நோக்குடன் ஒவ்வொரு வியாழக்கிழமையும் கூடும் திறந்த கலந்துரையாடற் களமான சமூக விஞ்ஞானக் கற்கை வட்டத்தில் எவர் வேண்டுமானாலும் கலந்துகொண்டு உரையாடித் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளலாம்.

Exit mobile version