Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நல்லாட்சி அரசின் எல்லைக்குள் கூட்டமைப்பு இணைந்துகொள்ள வதைமுகாம்

torturingcampஇலங்கை அரச படைகளினால் கடத்தப்பட்டுக் காணாமல் போனவர்களின் வதை முகாம் ஒன்று அனுராதபுரத்தில் காணப்படுவதாக காணாமல் போனோரைக் கண்டறியும் ஆணைக்குழுவைச் சேர்ந்த toசிலர் நேற்றுக் கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் தெரிவித்துள்ளனர்.

ஆஷா நாகேந்திரன் உட்பட மேலும் சிலர் இணைந்து ஒருங்கிணைத்த இந்த ஊடகவியலாளர் சந்திப்பில், இது தொடர்பாக இலங்கை அரசிடம் முறையிட்டுப் பலன் கிடைக்கப் போவதில்லை என்ற அடிப்படையிலேயே ஊடகங்களிடம் தெரிவிப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.

இலங்கை அரசுடன் இணைந்து நல்லிணகத்தை ஏற்படுத்தப் போவதாகவும், அரசியல் யாப்பில் மாற்றத்தை ஏற்படுத்தி உரிமைகளைப் பெற்றுக்கொடுக்கப்போவதாகவும் கூறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த முகாம் தொடர்பான கருத்துக்களுக்கு எந்த வகையான விளக்கத்தையும் கொடுக்கவில்லை. முகாம் தொடர்பான முழுமையான தகவல்கள் வெளியிடப்படும் வரையாவது இலங்கை அரசின் நியாயமான எதிர்க்கட்சியாகச் செயப்படுவார்களா என்பது கூடச் சந்தேகமே. எதிர்கட்சி அற்ற இலங்கை அரசை முழுமையான சர்வாதிகார அரசாக மாற்றிய ‘பெருமை’ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கே உரித்தானது.

‘நல்லாட்சி’ என்ற தலையங்கத்தில் நடத்தப்படும் எதிர்க்கட்சிகள் கூட இல்லாத இலங்கை அரச சர்வாதிகாரம் ராஜபக்ச அரசின் மென் தொடர்ச்சியே என்பதற்கு அனுராதபுர வதைமுகாம் ஒரு குறியீடு.

Exit mobile version