Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு: இலங்கையின் இன்றைய கதாநாயகர்கள்

இலங்கை அரசியலின் இன்றையக் கதாநாயகன் யாரென்றால் மகிந்த, மைத்திரி,ரனில் என்ற பெயர்களை எல்லாம் கடந்து சென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே உயர்ந்து நிற்கிறது. பல பில்லியன்கள பணம் புரளும் இலங்கை அரசியல் பேரத்தில் மகிந்த ராஜபக்சவின் முகத்தில் அறைந்தால் போல் திரு,சம்பந்தன் நீங்கள் சட்டவிரோத பிரதமர் எனக் கூறியதும் அதன் பின்னான கூட்டமைப்பின் அறிக்கையும், அக் கட்சி வரலாற்றின் கறைபடியாத ஒரு அத்தியாயத்தையும் கடந்து சென்றிருக்கின்றது.
கட்சியின் அறிக்கை,
1. மகிந்தவை சட்டவிரோத பிரதம மந்திரி என பகிரங்கமாக அறிவிக்கிறது.
2. மைத்திரிபால சிரிசேனவின் நடவடிகை சட்டவிரோதம் என்கிறது.
3. பாராளுமன்ற அமர்வுகளை பின்போடுவது பேரம்பேசுவதற்கான கால அவகாசம் என்கிறது.

ஜே.வி.பி உட்பட இலங்கையின் எந்தக் கட்சியும் முன்வைக்காத, இனவாதம் கலக்காத, இலங்கையின் முழு மக்களுக்குமான எதிர்க்கட்சியின் குரலாக ஒலிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் துணிகரமான குரல் இன்றைய காலத்தின் கட்டாயம்.
கூட்டமைப்பிற்கு புதிதாக முளைத்திருக்கும் முதுகெலும்பு முழு வீச்சில் வளர்ந்து உறுதியாக நிலைத்திருக்க வேண்டும் என சமூகப்பற்றுள்ள அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.

இதற்கிடையில் இனக்கொலையாளி மகிந்த ஆட்சிக்கு வந்தால், தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும், சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கு புதிய திட்டங்கள் அறிவிகப்படும் எனவும், மகிந்த ஆதரவு செய்தி இணையங்கள் போலிப் பரப்புரைகளை மேற்கொள்கின்றன.

Exit mobile version