இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் அளவெட்டிக் கூட்டம் சிவில் உடை அணிந்தோரினால் தாக்கப்பட்ட சம்பவம் பற்றி புதிய – ஜனநாயக மாக்சிச – லெனினிசக் கட்சியின் அரசியல் குழு சார்பாக அதன் பொதுச் செயலாளர் சி.கா. செந்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவ் அறிக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கை செயற்பாடுகள் பற்றிய நிலைப்பாட்டில் எமது கட்சிக்கு எவ்வித உடன்பாடும் கிடையாது. அதே வேளை அக் கட்சியினருக்கு உள்ள ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுவதை எக்காரணம் கொண்டும் மௌனமாக இருந்து ஏற்றுக் கொள்ளவும் முடியாது. பொலீஸ் அனுமதி பெற்று சட்ட ரீதியான நடாத்தப்பட்ட மேற்படி கூட்டத்தை சிவில் உடைதரித்த ராணுவத்தினர் அடாவடித்தனமாகத் தாக்குதல் நடாத்திக் குலைப்பது என்பது வடக்கு கிழக்கின் மீதான ராணுவ ஆதிக்கத்தையும் ஜனநாயக விரோதத்தையும் அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றது. அதனாலேயே கடந்த வருட நடுப்பகுதியில் இருந்து ஜனநாயகம் இயல்புவாழ்க்கை அரசியல் தீர்வு என்பனவற்றை முன்னுறித்தியும் எனைய பத்துக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் பல நிலைப் பிரச்சார இயக்கத்தை முன்னெடுத்தும் வருகின்றது. இவற்றை முனைப்புறுத்தியே இம் முறை எமது மேதினக் கூட்டத்தை யாழ் நகரில் நடாத்தியது. எனவே தேர்தல், வாக்குச் சேகரிப்பு, ஆசனங்கள,; பதவிகள் என்பனவற்றுக்கு அப்பால் சகல ஜனநாயக முற்போக்கு இடதுசாரி சக்திகளும் ஒன்றிணைந்து வடக்கு கிழக்கில் ஜனநாயகம், சுதந்திரம், இயல்பு ,வாழ்வு, அரசியல் தீர்வு ஆகியவற்றை வென்றெடுப்பதற்கான ஒரு பொது இணக்கப்பாட்டின் கீழ் செயலாற்ற முன்வரல் வேண்டும் என்ற வேண்டுகோளையே இவ் வேளை எமது கட்சி விடுக்கின்றது.
சி.கா. செந்திவேல்
பொதுச் செஊடகங்களுக்கான அறிக்கை-18-06-2011யலாளர்