தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி உறுப்பினர்களுக்கும், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனுக்கும் இடையிலான சந்திப்பின் பின்னர் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசியல் சூழ்நிலையை கவனத்திற் கொண்டு தமிழ் வேட்பாளர் ஒருவரை தேர்தலில் களமிறக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்களின் சார்பில் போட்டியிடக் கூடிய வல்லமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடக் கூடிய தகுதி இரா. சம்பந்தனுக்குக் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.