தமிழ்ப் பேசும் மக்கள் பிரிவினைவாதிகள் அல்லர் பிரிந்து செல்லும் உரிமையே மக்களின் கோரிக்கை. இலங்கை அரசு தமிழ்ப் பேசும் மக்களுக்கு சுதந்திரமாக வாழ உரிமை வழங்கத் தயார் என்றால் பிரிந்து செல்லும் உரிமையை வழங்குவதிலிருந்தே அது ஆரம்பிக்க முடியும்.
வெற்று அரசியல் முழக்கமாகத் தமிழீழம் என்ற கோரிக்கையை முன்வைத்த குழுக்கள் பிரிந்து செல்லும் உரிமையைக் கூட மறுத்து இதுவரை கால இழப்புக்களையும் தியாகங்களையும் கொச்சைப்படுத்தியுள்ளன.
இன்னொரு பக்கத்தில் மற்றும் சில தீவிர ‘தமிழீழக் காவலர்கள்’ இலங்கை அரசுடன் நேரடி வியாபாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.