Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

TNA உம் BTF உம் தமிழீழக் கோரிக்கையைக் கைவிட்டன

TamilEelamபிரித்தானியத் தமிழர் பேரவையின் (BTF) முக்கிய உறுப்பினர் ‘தமிழீழக் கோரிக்கையை’ கைவிட்டதாக ரைம்ஸ் ஒப் இந்தியா ஊடகத்திற்குத் தெரிவித்ததைத் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் (TNA) இதே கருத்தைத் தெரிவித்துள்ளது. ஒன்றிணைந்த இலங்கைக்குள் நாட்டைப் பிரிக்காத தீர்வு ஒன்றை முன்வைக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதானி சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்ப் பேசும் மக்கள் பிரிவினைவாதிகள் அல்லர் பிரிந்து செல்லும் உரிமையே மக்களின் கோரிக்கை. இலங்கை அரசு தமிழ்ப் பேசும் மக்களுக்கு சுதந்திரமாக வாழ உரிமை வழங்கத் தயார் என்றால் பிரிந்து செல்லும் உரிமையை வழங்குவதிலிருந்தே அது ஆரம்பிக்க முடியும்.

வெற்று அரசியல் முழக்கமாகத் தமிழீழம் என்ற கோரிக்கையை முன்வைத்த குழுக்கள் பிரிந்து செல்லும் உரிமையைக் கூட மறுத்து இதுவரை கால இழப்புக்களையும் தியாகங்களையும் கொச்சைப்படுத்தியுள்ளன.
இன்னொரு பக்கத்தில் மற்றும் சில தீவிர ‘தமிழீழக் காவலர்கள்’ இலங்கை அரசுடன் நேரடி வியாபாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

Exit mobile version