Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

TMVP உறுப்பினர்கள் கட்சித்தாவல் : பிரதேச சபைகளின் அதிகார மாற்றம்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த  களுவாஞ்சிக்குடி பிரதேசசபை இன்று முதல் சிறீலங்கா சுதந்திரக்கட்சின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
 
இச்சபையின் தவிசாளரான எஸ்.பாக்கியராசா உட்பட உபதவிசாளர் மேலும் மூன்று ரி.எம்.வி.பி உறுப்பினர்களும் சுதந்திரக்கட்சியில் இணைந்து கொண்டனர்.
 
களுவாஞ்சிக்குடி  பிரதேச சபையின் 9 உறுப்பினர்களில் மூவர் புளொட் அமைப்பையும் 6 பேர் ரி.எம்.வி.பி.கட்சியையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் ஒருவர் தொடர்ந்தும் அக்கட்சியிலேயே உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
 
சுதந்திரக்கட்சிக்கு மாறிய உறுப்பினர்கள் அக்கட்சியின் உறுப்புரிமையையும் பெற்றுக்கொண்டனர்.
 
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கட்டுப்பாட்டின் கீழ்வரும் இரண்டாவது பிரதேச சபை இதுவாகும். ஏற்கனவே ஓட்டமாவடி பிரதேசசபை இக்கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Exit mobile version