அது குற்றமல்ல என நீதி மன்றம் தெரிவித்ததும் விடுதலையான திருமுருகன், பெரியார் சிலைக்கு மாலை அணிவித்ததாக மீண்டும் கைதானார்.
போலிக் குற்றச்சாட்டுக்களின் பெயரில் கைதான திருமுருகன் தனிமைச் சிறையில் சித்திரவதை செய்யப்படுகிறார். மருத்துவர்கள் பரிந்துரைத்தும் மருத்துவ வசதிகள் மறுக்கப்படுகின்றன. உறவினர்கள் பார்வையிடுவது தடுக்கப்படுகின்றது.
ஈழத் தமிழர்களுக்காக தமிழ் நாட்டிலிருந்து குரலெழுப்பிய திருமுருகன் இன்று பயங்கரவாத அரசின் கூலிப்படைகளின் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
தமது வர்க்க நலனை உறுதிப்படுத்திக்கொள்ள இலங்கையில் தோற்றுவிக்கப்பட்ட சிங்கள பேரினவாதம் ராஜபக்ச காலத்தில் அதன் உச்சத்தை அடைந்து சாரிசாரியாக மனிதப்படுகொலைகளைக் நடத்தி சாரிசாரியாக அப்பாவிகளைக் கொன்று குவித்தது.
காங்கிரஸ் கட்சியால் தமது வர்க்க நலன்களுக்காகப் பாதுகாக்கப்பட்ட இந்துத்துவ அரசியலை உள்வாங்கிகொண்ட பாரதீய ஜனதா மத அடிப்படைவாதிகள் மோடி என்ற இனக்கொலையாளியின் தலைமையில் ஆட்சியதிகாரத்தைக் கையகப்படுத்திய நாளிலிருந்து இந்தியா முழுவதும் காட்டுமிராண்டி ஆட்சி நடத்திவருகிறது.
ஊடகச் சுதந்திரம் அச்சுறுத்தப்படுகின்றது, ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்படுகின்றனர்,போராட்டங்கள் கோரமாக ஒடுக்கப்படுகின்றன, சிறுபான்மைத் தேசிய இனங்கள் அழிக்கப்படுகின்றன,மானில உரிமை பறிக்கப்படுகின்றது,ஒடுக்கப்பட்ட சாதியினர் அடிமைகளாக்கப்படுகின்றனர்,காவிக் கும்பல்கள் சந்து பொந்துக்களிலெல்லாம் நுளைந்துவிட்டன, உலக வர்த்தக நிறுவனங்களின் கொள்ளைக் கூட்டமாக இந்தியா மாற்றப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் முதலாவது பணக்காரரான ரிச்சாட் பிரண்டனின் வேர்ஜீன் நிறுவனத்திற்கு இந்திய புதிய ரயில்வே ஒப்பந்தம் தாரைவார்த்துக் கொடுக்கப்பட்ட போது அவர் “உலகின் மிகச்சிறந்த தலைவர் மோடி எனப் பாராட்டினார்”.
ஹிடலர், முசோலீனி போன்ற சர்வாதிகளைப் பின்பற்ற எமது தேஆர்சத்தை வளர்ப்போம் என தமது கொள்கைத் திட்டத்தை வகுத்துக்கொண்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஆரம்பகால உறுப்பினர் மோடியின் பயங்கரவாத ஆட்சி திருமுருகன்களைச் சித்திரவதை செய்கிறது; ரிச்சாட் பிரண்சன்களைத் திருப்தி செய்கிறது.
இன்னமும் இந்திய கொள்கைவகுப்பாளார்களால் தான் நாம் அழிக்கப்பட்டோம் என நம்பிக்கொண்டிருக்கும், ஈழப் போராட்டம் பிரசவித்த பிற்போக்குவாதிகள் திருமுருகனுக்காகக் குரல்கொடுப்பார்கள், போராடுவார்கள் என்றெல்லாம் எதிர்பார்க்க முடியாது.
ஐ.நாவில் இலங்கை அரசிற்கு எதிராகப் பேசிவிட்டு கொழும்பு விமான நிலையத்தில் சென்றிறங்கிய எந்த அரசியல் வாதியையும் கைதுசெய்து இலங்கைப் பேரினவாத இனக்கொலை அரசு கூட சிறையில் அடைக்கவில்லை. இந்திய அரசே உலகின் அதிபங்கரவாத அரசு என்பதைப் நிறுவ இந்த ஒப்பீடு ஒன்றே போதுமானது.