Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மாவீரர் தினக் கணக்கு விபரம், நினைவு கூரலுக்கான விலை, அவலத்தில் போராளிகள்

ஒரு மில்லியன் பவுண்ஸ் விரைமாக்கப்பட்ட மாவீரர் வியாபாரத்தில் துண்டுவிழும் தொகை2009 ஆண்டு வரை வரவு செலவுகள் இல்லாமல் கொண்டாடப்பட்ட மாவீரர் பிரித்தானியா மாவீரர் தினத்தின் கணக்குகள் இம்முறை அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தச் செலவு அண்ணளவாக ஒரு லட்சம் பவுண்ஸ்கள். இலங்கைப் பேரினவாத அரசினால் தெருவில் விடப்பட்டு சமூகத்தால் வெறுத்து தனிமைப்படுத்தப்பட்ட போராளிகளின் சுய பொருளாதாரத் திட்டத்தை உருவாக்க இத் தொகை போதுமானது, கடந்த ஆறு வருடங்களை இத் தொகைக்கு அண்ணளவாகக் கணக்குப் போட்டால் அரை மில்லியன் பவுண்ஸ்களுக்கும் அதிகமானது.

இத் தொகை மாதிரிக் கிராமம் ஒன்றை அமைப்பதற்குப் போதுமானது.

இத் தொகையில் பெரும் பகுதி அவலத்தில் வாழும் மக்களுக்குச் சென்றடையவில்லை. அது நமது போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஆவணப்படுத்தலுக்குப் பயன்படவில்லை. போராட்டத்தின் நியாயத்தை உலகின் ஒடுக்கப்படும் மக்களுக்குக் கூறுவதற்குப் பயன்படவில்லை. புதிய அரசியல் திட்டத்தை வகுத்துக்கொள்ளப் பயன்படவில்லை. இலங்கை அரசையோ அன்றி அதன் பின்னணியில் செயற்படும் பல்தேசிய வர்த்தக நிறுவனங்களையோ எதிர்கொள்ளப் பயன்படவில்லை. மாறாக பெரும் வர்த்தக நிறுவனங்களால் நிர்வகிக்கப்படும் மண்டபத்தை வாடகைக்கு எடுத்துக்கொள்ளவும், அடையாளப் பொருட்களை வாங்கவுமே பயன்பட்டுள்ளது.

எதற்காக இவயெல்லாம், இவற்றின் விளை பலன்கள் என்ன? இவ்வளவு விலை செலுத்தப்படும் அஞ்சலிகளால் பயனடவைவது யார்?

இங்கு வீடியோவில் கூறப்படுவது போல் இக் கணக்குகள் இதுவரை…. யான கணக்குகள் மட்டுமே. மண்டபத்தில் உணவுப் பொருட்கள் மற்றும் பூ போன்றவற்றை விற்பனை செய்த பணம் இங்கு சேர்த்துக்கொள்ளபடவில்லை.

ஆக, இவ்வளவு பணம் ஊதாரித்தனமாக விரையமாக்கப்பட்ட பின்னரும் மாவீரர் வியாபாரம் இலாபத்தில் இயங்கவில்லை என வீடியோவில் கூறப்படுகிறது. தேசியக் கணக்குப் பிள்ளைகளுக்கே இது வெளிச்சம்!

(புலம்பெயர் நாடுகள் முழுவதிலும் மாவீரர் தினம் கொண்டாடப்பட்டாலும், இக் கணக்கு விபரம் பிரித்தானியாவிற்கானது மட்டுமே.)

Exit mobile version