Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அறியப்பட்ட பயங்கரவாதி இலங்கை இராணுவத்தின் தலைமை அதிகாரியானார்!

சரத் பொன்சேகாவுடன் ஜெகத் டயஸ்
சரத் பொன்சேகாவுடன் ஜெகத் டயஸ்

முள்ளிவாய்க்கால் மனிதப் படுகொலைகளை களத்தில் நின்று வழி நடத்திய பயங்கரவாதி ஜெகத் டயஸ் என்ற இற்கு இலங்கை இராணுவத்தில் தலைமைப் பதவி வழங்கப்பட்டுள்ளது. சரண்டைந்தவர்களைச் சுட்டுக் கொலை செய்தமை, பாலியல் வன் புணர்வு, சாரிசாரியாக நிராயுதபாணியான மக்களைக் கொலை செய்தமை என்று நூற்றுக்கணக்கான மனித குல விரோதக் குற்றச் செயல்களுடனும், இனப்படுகொலையுடனும் நேரடியான தொடர்புடைய ஜெகத் டயஸ் என்ற பயங்கரவாதியை ‘நல்லாட்சி’ அரசு என்று தன்னைப் பிரகடனப்படுத்தியுள்ள இலங்கை அரசு நியமித்துள்ளது.

போர்க்குற்றங்கள் தொடர்பான உள்ளக விசாரணை ஒன்றை நடத்தப்போவதாக உலக மக்களை ஏமாற்றும் மைத்திரி-ரனில் கும்பல் முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நெருங்கும் நேரத்தில் அழிக்கப்பட வேண்டிய பயங்கரவாதியைத் தலைமைப் பதவியில் நியமித்துள்ளது.

முள்ளிவாய்க்காலில் யுத்தம் செய்யவென இலங்கை அரசு தனது 57 வது படைப்பிரிவை 2007 ஆம் ஆண்டு பெப்ருவரி மாதம் உருவாக்கியது. புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட இப் படைப்பிவு மூன்று உப பிரிவுகளைக் கொண்டிருந்தது. இந்த மூன்று பிரிவுகளது,ம் கட்டளைத் தளபதியாக ஜெகத் டயஸ் செயற்பட்டார்.

வெள்ளாங்குளம், அக்கராயன்குளம், திருமுறிகண்டி,கொக்காவில், கிளிநொச்சி,ராமநாதபுரம் போன்ற பகுதிகளைக் கைப்பற்றும் போரில் நேரடியாகவே களத்தில் நின்று மக்களைக் கொன்று குவித்தார். வெறியூட்டப்பட்ட இராணுவப் பயங்கரவாதிகளைப் பயிற்சியளிப்பதிலும் ஜெகத் டயஸ் செயற்பட்டார்.

1980 ஆம் ஆண்டு இராணுவத்தில் இணைந்துகொண்ட டயஸ், 2005 ஆம் ஆண்டி பிரிகேடியராகவும், 2008 ஆம் ஆண்டு 57 ஆம் படைபிரிவை நடத்துவதற்காக மேஜர் ஜெனரலாகவும் பதவி உயர்த்தப்பட்டார்.
இனக்கொலையாளி ராஜபக்சவிற்கு நெருக்கமான டயஸ், வன்னிப் படுகொலைகளை முடித்துக்கொண்டதும் 2009 ஆம் ஆண்டிலேயே ஜேர்மனிய உதவித் தூதராக நியமிக்கப்பட்டார். போர்க்குற்றங்களுக்காகக் கைதாகலாம் என்று கருதி 2011 ஆம் ஆண்டு இலங்கை சென்ற டயஸ் அங்கு இலங்கை இராணுவத்தின் உதவித் தளபதியாக நியமிக்கப்பட்டார்.

ஆயிரக்கணக்கான அப்பாவிகளும், போராளிகளும் சிறைகளில் அடைத்துவைக்கப்பட்டுள்ள அவலத்தின் இடையே பயங்கரவாதி ஒருவரை இராணுவத்தின் தலைமை அதிகாரியாக்கிய மைத்திரி-ரனில் குழு தம்மைப் பேரினவாதிகள் என நிறுவியுள்ளனர்.

Exit mobile version