Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

புலிகள் இயக்கத்தின் பணச் சேர்ப்பிக்குப் பொறுப்பாக இருந்தவர் ஏனையோரைக் காட்டிக்கொடுத்தார்

தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் குற்றத்தை ஒப்புக்கொண்ட TCC உறுப்பினர் : விசித்திர வழக்கு

என்ற செய்தி இனியொருவில் வெளியானது தெரிந்ததே. இதன் தவறான பக்கங்களைச் சுட்டிக்காட்டி நெதர்லந்த்லிருந்து வியாசன் கூறும் சரியான தகவல்கள் கீழே(ஈழப் போராட்டத்தை முன்வைத்து மில்லியேனாரான பலர் இன்று காட்டிக்கொடுப்பு வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்களை மகள் முன் கொண்டுவரும் ஒரு பகுதியாக இனியொருவில் பல்வேறு தகவல்களும் கட்டுரைகளும் வெளியாகின. அவை தொடர்பான ஏனைய விமர்சங்கள் வரவேற்கப்படுகின்றன.):

செய்தியில் சிறு பிழை இருப்பதாக அறிய முடிகிறது. ஏனெனில் இந்த 5 பேருக்கும் 21.10.2011 அன்று தீர்ப்பு வழங்க பட்டு விட்டது. அந்த தீர்ப்பின்படி   திரு ராமச்சந்திரன் செல்லையாவிற்கு    6 வருடம்,  றங்கன்ராமலிங்கத்திற்கு 5 வருடம்,இளவரசன் திருநாவுக்கரசுவிற்கு 3 வருடம்,  மனோ ஜேசுரட்னத்திற்கு 2 வருடம் 6மாதமும்,லிங்கம் தம்பையாவுக்கு 2வருடமும் தீர்ப்பளிகபட்ட்டது. இவர்கள்  தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடுசெய்தார்கள். மேல்முறையீடு நீதிமன்றம்  வழங்கிய தீர்ப்பே 30-04-2015 வெளியாகியது

இதில் மூவர்  நன்நடத்தை காரணமாக தண்டனை காலத்துக்கு முன் விடுதலையானார்கள். நாலாமரான திரு ரஙகன் விடுதலைக்காக தண்டனை முடிந்து விடுதலைக்காக நீதிமன்றம் கொண்டுவரப் பட்ட  போது ,தான் முன்னர்கூறியவை உண்மை இல்லை என்றும் இப்போது உண்மை கூற உள்ளேன்  என்று கூறி அதற்கு ஒரு நாள் தரும்படி கேட்டுக்கொண்டார்.

அதன் படி நீதிமன்றம் அவரின் முறைப்பாட்டை  பதிவு  செய்தது, அதில்  தான் விடுதலைப்புலி உறுப்பினர் என்றும் தான்ஆயுதப்பகிர்ச்சி எடுத்ததாகவும் தான்  இலங்கையில் இருந்து  திரு மணிவண்ணன் (கஸ்ரோ) அவர்களால்  இங்குஅனுப்பப்பட்டதாகவும்  இங்குள்ள புலிஅமைப்பின்  ரி.சி.சி செயற்பாட்டை பொறுப்பு ஏற்றதாகவும், ரி.சி.சி இலங்கையில் உள்ள அனைத்துலக செயலகத்துக்கு கீழ்  தான் செயல்படுவ தாகவும் கூறினர்.  இதன் காரணமாக  வழக்கு வேறுஒரு திசைக்கு திரும்பியது. ரங்கனை  தவிர மற்ற 4 வரும் தாங்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சார்ந்தவர்கள்  என ஒத்துக்கொள்ளவில்லை.

சிலர் ரங்கனை கேட்டார்கள் ஏன் இப்படி சொன்னிர்களேன்று அதற்கு அவர் இப்படி சொன்னால் அரசாங்கம் தம் (புலி) தடையை நீக்கி சுதந்திரமாக செயல்பட விடுவதாக சொன்னார்கள்  அதனால் தான் அப்படிசொன்னேன் என்றார். தண்டனை முடிந்தபின் இப்படி சொல்வதன் காரணம் இவர் யாரோ சொல்லிகொடுத்ததை சொல்லியுள்ளார். இலங்கை அரசு  புலிகளை பயங்கரவாதிகள் என முத்திரை குத்துவதற்கு அனைத்து வழிகளிலும் முயற்ச்சி செய்தது. அதனை திரு ரங்கன் மிக சிறந்த முறையில் நிறைவேற்றியுள்ளார். மேலும் பயங்கரவாதிகள்  என்ற முத்திரை மட்டுமல்ல மேலும்  பணம் சேர்த்தவர்கள் 9 பேர் வழக்கு இன்னும்  தீர்க்கப் படவில்லை  அவர்களது நிலமை பாதிக்கப்படலாம்.

Exit mobile version