பிரித்தானியத் தமிழர் பேரவையின் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வெஸ்ட்மின்ஸ்டர் அபே இலிருந்து ஆர்ப்பாட்டத்தை முடித்துக்கொண்டு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
பிரித்தானியத் தமிழர் பேரவையின் ஆர்ப்பாட்டத்தில் கைதிகளை விடுதலை செய்யுமாறும், ஈழத் தமிழர்களின் வாழ்வாதாரம் குறித்தும் சுலோகங்கள் எழுப்பப்பட்டன.
அதே வேளை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு நடத்திய போராட்டத்தின் தமிழீழம், எங்கள் தலைவன் பிரபாகரன் போன்ற முழக்கங்கள் முன்வைக்கப்பட்டன.
ஈழத்தில் மக்களிலிருந்து அன்னியமாகி அவர்களுடைய வாழ்வு தொடர்பான குறைந்த பட்ச உணர்வுமின்றி ஒருசில தலைவர்களின் நலன்களுக்காக நடத்தப்படும் போராட்டங்களில் சுலோகங்கள் கூடக் கேலிக் கூத்தாகிவிட்டன.