எஸ்.எல்.டீ.எப் என்ற பெயரில் ஜனநாயக மற்றும் புலிஎதிர்ப்பு கோஷ்ங்களுடன் இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ் நாடுகளில் செயல்பட்டு வந்த புலம் பெயர் தமிழர்கள் மத்தியிலான ஒரு அமைப்பானது வானொலி நிலையம் ஒன்றை உடைத்து திருடியதை ஆதார பூர்வமாக தேசம்நெட் இணையத்தளம் நிறுவியுள்ளது. பிரித்தானியச் சட்டங்களின் அடிப்படையில் சட்டவிரோதமான இத்திருட்டுச் சம்பவம் தொடர்பான ஆதாரபூர்வமான விடயங்கள் ரீ.பி.சி வானொலி நிலைய உரிமையாளர் ராம்ராஜ் அவர்கள் கொள்ளையர்களுக்கெதிரான சட்டபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.