வீரத் தமிழர் முன்னணி என்ற பெயரில் சீமானின் குழுவினர் பிரித்தானியாவில் பணம் திரட்ட ஆரம்பித்துள்ளனர். தென்னிந்தியாவில் போஸ்டர் பிரச்சாரம் செய்வதற்காக பெருந்தொகைப் பணம் தேவைப்படுவதாகவும், தமிழகத்தில் வாக்குப் பொறுக்கி ஆட்சியைப் பிடிப்பதாகவும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் தீவிர இனவாதத்தைப் பரப்பும் முயற்சியில் சீமான் குழு ஈடுபட்டுள்ளது.
ஈழம் பல்தேசிய நிறுவனங்களதும், ஏகபோக அரசுகளதும் சூறையாடலுக்கு உள்ளாக்கப்படுகின்றது. வன்னி இனப்படுகொலையின் பின்னர் தமிழர்களின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை அழிக்கும் நோக்கில் ராஜபக்ச அரசு அமைத்த அத்தனை திட்டங்களையும் தொடரும் சிரிசேன அரசு, ஏகாதிபத்தியங்களின் தயவையும் பெற்றுள்ளது. தொடரும் இனவழிப்பையும், பல்தேசிய நிறுவனங்களின் சூறையாடலையும், தெற்காசியப் பிராந்தியம் இராணுவ மயமாக்கப்படுவதையும் மக்கள் எதிர்ப்பின்றி நடத்துவதற்கு தேசிய வெறியூட்டும் சீமான் போன்றவர்கள் தேவைப்படுகின்றனர்.
லைக்கா நிறுவனம் இலங்கை அரசுடன் நேரடித் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டிருந்த வேளையில் தமிழர்கள் என்பதால் லைக்காவை ஆதரிக்கிறோம் என்று சீமான் வெளிப்படையாகக் கூறினார்.
ஈழத்தில் நடப்பது போராட்டமல்ல பயங்கரவாதம் என்று கூறிய கல்விக் கொள்ளைக்காரன் பச்சைமுத்துவை சீமான் ஏழைகளின் காவலன் எனக் கூறினார்.
தமிழகத்தில் மணல் கொள்ளையடிக்கும் வைகுண்டராசன் சீமானின் நண்பர்.
சீமான் போன்ற ஒருவர் தமிழர்களின் பிரதி நிதியென்று உலக மக்களிடம் கூறுவது தமிழினத்தின் அவமானமும் அருவருப்பும் என்பதை சீமானின் அப்பாவி விசிறிகள் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.
தமிழ் நாட்டின் எல்லைக்குள்ளேயே மிருகங்கள் போல நடத்தப்படும் ஈழ அகதிகளைக் கூட கண்டுகொள்ளாத சீமான் புலம்பெயர் நாடுகளில் பணம் திரட்ட ஆரம்பித்திருப்பது பகல் கொள்ளை.
இலங்கை அரசிற்கு எதிராகவும், அதன் பின்னணியில் செயற்படும் ஏகாதிபத்தியங்களுக்கு எதிராகவும், பல்தேசிய வியாபார நிறுவனங்களுக்கு எதிராகவும் போராட்டங்கள் இப்போது தான் முழைவிட ஆரம்பித்துள்ள நிலையில் அவற்றை சீமானின் அருவருப்பான இனவாதம் அழிக்க முற்படுகிறது.
தமிழ் நாட்டின் கரையோரங்களை அழிக்கும் மணல் கொள்ளைக்காரர்களும், கல்விடை அழிக்கும் பச்சைமுத்துக்களும், ராஜபக்சவின் நண்பர்களும் சீமானின் ஆதரவாளர்கள் என்றால் சீமான் குழுவின் நோக்கம் சந்தேகத்திற்குரியதே.
ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற இஸ்லாமியப் பயங்கரவாத அமைப்பு இஸ்லாமியர்களின் நட்பு சக்தியல்ல. அமெரிக்க ஏகாதிபத்தியமே ஐ.எஸ்.ஐ.எஸ் ஐ உருவாக்கியது என்பது ஆதாரபூர்வமானது. ஐ.எஸ்.ஐ.எஸ் இற்கு இணையான கருத்துக்களை முன்வைகும் சீமான் தமிழர்களின் நண்பன் அல்ல; எதிரி!
பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி , அவுஸ்திரியா போன்ற நாடுகளிலுள்ள வெளி நாட்டவர்களுக்கு எதிரான நிறவாத அமைப்புக்களை விடக் கேவலமான இனவாதக் கருத்துக்களை முன்வைக்கும் சீமான் குழுவினரின் வருகை முளையிலேயே கிள்ளியெறியப்பட வேண்டும்.
ஐ.எஸ்.ஐ.எஸ் இற்கு இணையான பயங்கரவாதக் கருத்துக்களை முன்வைக்கும் சீமான் குழுவினர்,
ஒடுக்கப்படும் ஈழத் தமிழர்களை ஜனநாயக முற்போக்கு சக்திகளிடமிருந்து அன்னியப்படுத்தும் அயோக்கியத்தனத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். பிரித்தானியாவில் முளைவிட முனையும் இந்த நச்சுக் கும்பல் முளையிலேயே கிள்ளியெறப்பட வேண்டும்.
ஈழப் போராட்டத்தை பயங்கரவாதம் எனக் கூறும் பாரிவேந்தர் பச்சைமுத்து:
பாரிவேந்தர் பச்சைமுத்துவை கொடைவள்ளல் எனப் புகழும் சீமான்: