Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கஜேந்திரகுமாரோடு சுரேஷ் பிரேமச்சந்திரனும் வீட்டிற்கு அனுப்பப்பட்டார்

sureshபேரினாவதக் கட்சிகளையும் பிழைப்புவாதிகளையும் நிராகரித்த மக்கள் சுரேஷ் பிரேமச்சந்திரனையும் வீட்டுக்கு அனுப்பியுள்ளார்கள். தமிழீழ விடுதலப் புலிகளின் அரசியல் தொடர்ச்சி எனத் தன்னை முன்னிறுத்திய அனந்தி சசீதரன் தேர்தலின் இறுதிக்கட்டத்தில் சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு நேரடி ஆதரவு வழங்கியிருந்தார். போராளிகளதும் மக்களதும் இழப்பையும், புலிகளின் அடையாளங்களையும் முன்வைத்து மக்களை ஏமாற்ற முயலும் எந்த அரசியல்வாதிகளையும் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்கான மற்றொரு சாட்சியாக சுரேஷ் இன் தோல்வி அமைந்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான பிரேமச்சந்திரன் இலங்கையில் இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் நிலைகொண்டிருந்த போது இந்திய இராணுவத்தின் துணை ஆயுதக் குழுவின் தலைவராகச் செயற்பட்டவர்.

அவ்வேளையில் புலிகளின் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் என நூற்றுக்கணக்கானோரின் கொலையை முன் நின்று நடத்தியவர். இந்திய இராணுவம் அதன் துணைக்குழுக்களோடு இணைந்து நடத்திய கட்டாய ஆட்சேர்ப்பிற்கு தலைமை தாங்கியவர். மண்டையன் குழு என்று அழைக்கப்பட்ட கொலைக் குழுவின் தலைவராகச் செயற்பட்டவர்.

பின்னர் வன்னியில் புலிகள் பலமான நிலையிலிருந்த போது அவர்களின் தயவில் பாராளுமன்ற அரசியலில் உட் புகுந்தார்.

அதன் பின்னான காலம் முழுவதும் புலிகளை முன்வைத்து அரசியல் நடத்தும் வழிமுறைய வரித்துக்கொண்டார்.

இம் முறை தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து ஒதுங்கியிருந்த அனந்தி சசீதரன், இறுதியில் சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு நேரடி ஆதரவு வழங்கினார்.

சுரேஷ் ஐ மக்கள் நிராகரித்ததானது அனந்தி சசீதரனை பிரதானப்படுத்திய அரசியலையும் நிராகரித்ததாகவே கருதப்படுகின்றது.

தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் என்பது தவிர்க்க முடியாத அரசியலாகிவிட்டது.

கடந்த காலப் போராட்டத்தின் தவறுகள் அனைத்தையும் விமர்சனத்திற்கு உட்படுத்தி அதிலிருந்து கற்றுக்கொண்டு முன் நோக்கிச் செல்வதே சரியான வழிமுறை என்பதை மக்கள் உணர்ந்துள்ளார்கள் என்பதையே தேர்தலின் தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன.

Exit mobile version