இந்தியாவின் ஏனை பகுதிகளை மதவெறி, சாதீய வெறிப் போதைக்குள் உட்படுத்துவதில் தற்காலிக வெற்றிகண்டுள்ள ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதந்த அமைப்பால் வழி நடத்தப்படும் பாரதீய ஜனதா அதிகாரம் தமிழ் நாட்டில் வெற்றிகொள்ள் முடியவில்லை.
இதனால் சீமான் தலைமையிலான் தமிழ் தேசிய மொழி-சாதீய வெறிக் கும்பல்களின் துணையோடு தமிழ் நாட்டின் ஜனநாயக முற்போக்கு இயக்கங்களையும், ஊடகங்களையும் அழிக்கும் முயற்சியில் RSS ஈடுபட்டுள்ளது. இச் சமூகவிரோதக் கும்பல்களின் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கருப்பர் கூட்டம் என்ற youtube தளத்தை கருத்தியல்ரீதியாக எதிர்கொள்ள முடியாமல் முடக்கும் முயற்சி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இத்தளத்திற்கு எதிரான உளவியில் யுத்தம் நடத்தும் பி ஜே பி சமூகவிரோதக் கும்பலுடன் அதன் மறைமுக முகவர்களான நாம் தமிழர் கட்சி இணைந்துகொண்டுள்ளது.
இந்த நிலையில் இவ்வாறான கருத்துரிமை மறுப்பிற்கு எதிரான போராளிகள் அனைவருக்கும் இனியொரு தனது ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது.