Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நாங்கள் மாடு மேய்த்தவர்கள் இல்லை : சுமந்திரன் மீது தேசியப் பொரியல்

ஜெனீவா தெருவொன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி எம்.ஏ.சுமந்திரன் கடக்க முற்ப்ட்ட போது புலம்பெயர் இளைஞர் ஒருவருக்கு மேலிட்ட உணர்சியின் உச்சத்தில் சுமந்திரனைத் திட்டித் தீர்த்த காட்சி பேஸ்புக்கிலும், இணையங்களிலும் வெளியாகியிருந்தன. கஜேந்திரகுமாரின் தேர்தல் கூத்துக்களின் பின்னர் வெளியாகியிருந்த தேசிய கேலிக்கூத்து இது. ஐரோப்பியத் தெருக்களில் நாய்களுக்குக் கிடைக்கும் சுந்தந்திரம் அகதிகளுக்குக் கிடைக்கவில்லை என்றாலும், திட்டுவதற்கு சுதந்திரம் உண்டு என்பதை அந்த இளைஞன் நிறுவிவிட்டார்.

இளைஞனின் உணர்ச்சி உச்சமடைந்ததற்குக் காரணம் சுமந்திரன் வணக்கம் சொல்லவில்லை என்பது மட்டும் தான். அடப்பாவமே ! இதுவரைக்கும் துரோகியென்று துரத்தப்பட்ட சுமந்திரனிடமிருந்து வணக்கத்தை இளஞன் ஏன் எதிர்பார்த்தார், பிரச்சாரத்திற்கு என்றே திட்டமிட்டே காணொளி எடுக்கப்பட்டதா என்ற கேள்விகள் எல்லாம் தொக்கு நிக்க, அதனைப் பிரச்சாரப் படுத்திய தேசியத் தேசியக் குஞ்சுகளையும் பொரியல்களையும் என்னென்பது?

இவை எல்லாவற்றைற்கும் மேல், தான் இலங்கையில்  மாடுமேய்த்துவிட்டு ஐரோப்பாவிற்கு வரவில்லை என உணர்ச்சிகளை உள்ளே விட்டுத் தாக்குதல் நடத்திய அந்த இளைஞன் விவசாயிகளை தமிழீழத்திலிருந்து துரத்தியடித்துள்ளார். சுமந்திரன் மட்டும் தான் மேட்டுக்குடி என்று எண்ணியவர்களுக்கு இது செருப்படி!

இதற்கும் மேல் இளைஞனின் வீடியோவைத் தயாரித்து, இயக்கி, ஒளிப்பதிவு செய்து தேசியப் பெருமையோடு வழங்கிய தேசிய விசில்களை எப்படி அழைப்பது. தமிழீழம் என்ன இவர்களின் தாத்தாவிட்டு தாழ்வாரத்திலா கிடக்கிறது, விவசாயிகளை வார்த்தைகளால் இனச் சுத்திகரிப்புச் செய்வதற்கு?

தமிழ் விவசாயிகளை கொச்சைப்படுத்தி, தமிழீழழத்திலிருந்து நீக்கி பிரசாரம் செய்த பேஸ்புக் பிதாமகன்களும் இணையங்களும் இலங்கை அரசின் நிதியில் இயங்குவதாக எந்தத் தகவலும் வந்துசேரவில்லை.

இவர்களின் தனி நபர் கலர்ப்படம் சுமந்திரன் மீதான அனுதாபங்களை அதிகரித்துள்ளது. ஆக, இவர்கள் சுமந்திரனால் முடுக்கிவிடப்பட்டவர்களோ?

கணொளி – நன்றி : பதிவு

Exit mobile version