Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மைத்திரிபாலவின் சகோதரர் பொலநறுவை தாதா பிரியந்த சிரிசேனவின் மரணத்தின் அரசியல்

walirajமைத்திரிபால சிரிசேனவின் இளைய சகோதரர்களில் ஒருவரும் மணல் கொள்ளைத் தாதாவுமான வெலி ராஜு எனப்படும் புத்ததாச பிரியந்த சிரிசேன நேற்று 28.03.215 அன்று கொழும்பு வைத்தியசாலை ஒன்றில் அகால மரணமடைந்தார். அவரது மரணத்திற்கு பாகிஸ்தான் இரங்கல் செய்தி அனுப்பிய கோமாளித்தனம் தவிர இலங்கை அரசியலில் பல்வேறு அதிர்வலைகளை இச்சம்பவம் எற்படுத்தியுள்ளது. வெலி ராஜு என்ற பொலநறுவை சண்டியன் நீண்டகாலமாக மணல் கொள்ளை வியாபாரத்தில் ஈடுபடுபவர். ராஜரட்ட பில்டேர்ஸ் என்ற நிறுவனத்தின் உரிமையாளரான இவர் பொலநறுவையில் அறியப்பட்ட தாதா.

பொலநறுவையில் வீடொன்றில் வைத்து நடைபெற்ற வாய்த் தர்க்கத்தில் பங்காளி ஒருவரால் கடந்த வியாளனன்று தாக்கப்பட்டார். அதன் பின்பு ஹெலிகொப்டர் ஒன்றின் ஊடாக கொழும்பிற்கு கொண்டுவரப்பட்ட வெலி ராஜு அங்கு மரணமானார். 12 உறுப்பினர்கள் கொண்ட குடும்பத்தின் கடைசி நபரான இவர் மைத்திரிபால உடன் எந்தத் தொடர்பும் அற்றவர் என அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் வெலி ராஜுவை கொழும்பிற்கு ஹெலி கொப்டரில் கொண்டு சென்றதை உதாரணம் காட்டி அவர் மைத்திரியுடன் நெருங்கிய தொடர்பிலிருந்தார் என்கின்றனர். சீனாவில் சுற்றுபயணம் செய்துகொண்டிருக்கும் உறுப்பினரான மைத்திரிபாலவின் சகோதரரின் மரணத்தை பாகிஸ்தான் உலக மயப்படுத்தியுள்ளது.

மைத்திரிபாலவைச் சுற்றிக் கட்டமைக்கப்பட்டுள்ள விம்பத்திற்கும் அவரது சகோதரரின் தாதாத் தனத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதால் மைத்திரியால் கவனிக்கப்படாமல் அவர் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என்பதை அனுமானமாக வைத்துக்கொள்ளலாம்.

பொலநறுவையில் அருசி வியாபாரம் செய்யும் மில்லியனேர் டட்லி சிரிசேனவும் மைத்திரியின் சகோதரர் தான். தேர்தல் காலத்தில் மைத்திரிக்கு ஆதரவாக இவர் உடகங்களில் நேர்காணல்களை வழங்கினார்.

பொலநறுவையில் அருசி மாபியா என அழைக்கப்படும் டட்லி சிரிசேன மகிந்த ராஜபக்ச அரசின் செல்வாக்கைப் பயன்படுத்தினார் என்பதை அவரே மறுக்கவில்லை.

இவை அனைத்திற்கும் மேலாக மைத்திரி ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிய சில நாட்களிலேயே தனது சகோதரர்களில் ஒருவரான குமாரசிங்க சிரிசேனவை சிறீலங்கா ரெலிகொம் இன் தலைவராக நியமித்தார்.

தெற்காசியப் பிராந்தியத்தில் ஐரோப்பா, ஆசியா மத்திய கிழக்கு போன்ற நாடுகளை இணைக்கும் தொலைத்தொடர்பு மற்றும் இன்டர்னெட் கடலடித் தொடர்புகளைக் கவனிக்கும் சிறீலங்கா ரெலிகொம் மில்லியன்கள் புரளும் வியாபாரம்.

ராஜபக்ச குடும்பம் தனது குடும்பதினரை சிறீலங்கா ரெலிகொம் இன் உள் நுளைத்து பணக் கையாடல்களில் ஈடுபட்டு வந்தது. இதனால் குமரசிங்க சிரிசேனவின் நியமனம் குறித்து எதிர்த்தரப்பு மூச்சுக்கூட விடவில்லை.
இந்தப் பணத்தின் வாசனையை அறிந்து கொண்ட மைத்திரிபால குடும்பம் ரெலிகொம் சேவையை தனது கட்டுப்பாட்டிற்கு உட்படுத்திற்று.

Exit mobile version