Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மைத்திரியின் சகோதரரின் மரணத்தை வைத்துப் பிழைப்பு நடத்திய தாதாக்கள்

Priyantha_Sirisena_Weli_Raajuமைத்திரிபால சிரிசேனவின் சகோதரரின் மரணச்சடங்கு பொலநறுவையில் நடைபெற்றது. இலங்கையின் அரசியல்வாதிகளில் பலர் மரணச்சடங்கில் கலந்துகொண்டனர். பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, விஜயதாச ராஜபக்ஸ, லக்ஸ்மன் கிரியல்ல , ரோசி சேனாநாயக்க, முன்னாள் பிரதமர் டி.எம். ஜயரட்ன, சபாநாயகர் சமால் ராஜபக்ஸ, முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, பாராளுமன்ற உறுப்பினர் நமால் ராஜபக்ஸ உள்ளிட்ட பலரும் மரணச்சடங்கில் கலந்துகொண்டனர்.

மைத்திரிபால சிரிசேன மரணச்சடங்கில் கலந்துகொள்ளவில்லை. வெளி நாடு சென்ற அவர் நாடு திரும்பவில்லை எனத் ஊடகங்கள் தெரிவித்தன.

மைத்திரியின் சகோதரரான புத்ததாச பிரியந்த சிரிசேனவின் மரணத்தை அரசியலாக்கி பிழைப்பு நடத்துவதற்காக மரணச்சடங்கில் ஒரு கூட்டம் கலந்துகொண்டிருக்கிறது. முழு நாட்டையும் கொள்ளையிடும் கோப்ரட் தாதாக்கள் உள்ளூர் தாதாவின் மரணத்தை அரசியலாக்க முற்படுவது தெளிவாகத் தெரிந்தது. பிரியந்தவுடன் மைத்திரி தன்னை அடையாளப்படுத்த விரும்பவில்லை என்ற போதும், மைத்திரியின் தனியாதிக்கத்தை விரும்பாத எதிரணி உணர்ச்சி வியாபாரம் ஒன்றை மரணச்சடங்கில் நடத்தி வைத்தனர்.

அவர்கள் பிரியந்தவுடன் மைத்திரியை அடையாளப்படுத்தினர்.

ஹம்பாந்தோட்ட நிலப்பிரபுத்துவத் தாதாக்களான மகிந்த ராஜபக்ச குடும்பம் வன்னியில் நடத்திய படுகொலைகள் தாதா கலாச்சாரத்தின் உச்சம். இலங்கையின் அரசியல்வாதிகள் பிரியந்தவுடன் தம்மை அடையாளப்படுத்துவதே பொருத்தமானது.

புலம்பெயர் போலித் தமிழ்த் தேசியவாதிகளில் கழிப்பறையான ஊடகம் ஒன்று பிரியந்தவின் கொலையை விசாரிப்பதில் இந்திய உளவுத்துறையும் அமெரிக்க உளவுத்துறையும் போட்டி போடுவதாகச் செய்தி வெளியிட்டு தனது சில்லறைப் பிழைப்பை நடத்தியது. இவர்கள் அனைவருமே அனாதைப் பிணங்களை வைத்துப் பிழைப்பு நடத்தி அனுபவம் மிக்கவர்கள்.

Exit mobile version