Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஐ.நாவும் இலங்கை அரசும் இணைந்து 60 ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்ற அருவருப்பு

sri-lanka-un1945 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் 70 வருட நிறைவு 2015 ஆம் ஆண்டில் பேசப்பட்டது. அதே வேளை 1955 ஆம் ஆண்டு இலங்கை ஐ.நாவில் இணைந்து கொண்ட 60 ஆம் ஆண்டு இந்த வருடம் டிசம்பர் மாதம் 14 ம் திகதி. 60 ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்கான பிரச்சார நடவடிக்கைகளை ஐ.நா வும் இலங்கை அரசும் இணைந்து கொழும்பில் ஆரம்பித்துள்ளன. இலங்கை அரசின் சார்பில் வெளிநாட்டமைச்சின் செயலாளர் சித்ராங்கனி வாகீஸ்வராவும் ஐ.நா இன் சார்பில் திரு சபினே நந்தியும் பிரச்சாரத்தை ஆரம்பித்து வைத்தனர்,

‘Our UN. අපේ UN. எங்கள் UN.’ (‘Our UN. Apey UN. Engal UN.’)’ என்ற சுலோகங்கள் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகளுடன் பிரச்சாரம் ஆரம்பிக்கபட்டது. கடந்த அறுபது ஆண்டுகளில் ஐ.நாவும் அதன் மனித உரிமை ஆணையகமும் பார்த்துக்கொண்டிருக்க தமிழ்த் தேசிய இனத்தின் ஒரு பகுதியே அழித்துத் துவம்சம் செய்யப்பட்டிருக்கிறது. முள்ளிவாய்க்கலில் இந்த நூற்றாண்டின் கோரமான இனப்படுகொலைகளில் ஒன்று நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது.

ஜே.வி.பி தலைமையிலான ஆயுதப் போராட்ட காலங்களில் ஆயிரக்கணக்கான அப்பாவிச் சிங்கள மக்கள் இலங்கை அரசால் தெருத்தெருவாகக் கொல்லப்பட்டுள்ளனர். மலையக மக்கள் இந்த நூற்றாண்டிலும் கொத்தடிமைகளாகப் பயன்படுத்தப்படுகின்றனர். இஸ்லாமியர்களுக்கு எதிரான பாசிசக் குழுக்கள் அவர்களின் இருப்பை அச்சுறுத்தின.

இவை அனைத்தையும் இன்னும் உண்மைகளுக்காக மரணித்துப் போன ஊடகவியலாளர்கள், மனித உரிமை வாதிகள், ஜனநாயக வாதிகள் அனைவரையும் ஐ.நா வின் அறுபது ஆண்டுகால வரலாற்றின் பின்புலத்தில் நினைவு கூர வேண்டும். இன்னும் இனச் சுத்திகரிப்பும் இனவழிப்பும் தொடர்கின்ற சுழலிலும் போர்க்குற்ற விசாரணை இழுத்தடிக்கப்படும் நிலையிலும் நிறைவு விழா ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரச பயங்கரவாதிகள் இன்னும் மக்கள் மத்தியில் உலா வரும் நிலையில் ஐ.நா இலங்கை அரச அதிகார வர்க்கத்திற்குச் சேவையாற்றி வருகிறது.

Exit mobile version