Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அவுஸ்திரேலியாவிலிருந்து சென்ற தமிழ் ஊடகவியலாளர் இலங்கை விமானநிலையத்தில் கைது

sasikaran_punniyamurthi_croppedமைத்திரி – ரனில் அரசு வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்களை இலங்கைக்கு வருமாறு அழைத்திருந்த்தமை தெரிந்ததே. அழைப்பை ஏற்றுக்கொண்ட அவுஸ்திரேலியவில் வசிக்கும் தமிழ் ஊடகவியலாளரான சசிகரன் புண்ணியமூர்த்தி என்பவர் இலங்கை அரசின் குற்றவியல் விசாரணைப் பிரிவினால் கட்டுனாயக்க விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையின் நுளைவாசலிலேயே தனது நல்லாட்சியின் முன்முகத்தை வெளிக்காட்டிய இலங்கை அரசு, கைதுசெய்யப்பட்ட பின்னர் நீர்கொழும்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அங்கு அவரது கடவுச்சீட்டு கையகப்படுத்திக்கொண்ட இலங்கை நீதிமன்றம் பத்தாயிரம் ரூபா பிணையில் விடுவித்தது.

மட்டக்களப்பைச் சொந்த இடமாகக் கொண்ட சசிகரன் அவுஸ்திரேலிய தமிழ் ஊடகங்களில் பணியாற்றியுள்ளார்.

இலங்கைக்குச் செல்வதற்கு முன்பதாக அந்த நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிற்கு சசிகரன் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்திருந்தார். ‘எனது பிறப்பிடமான இலங்கைக்கு வருவதற்கு முன்னர் எனது பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்’ என அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

கடந்தவாரம் பிரித்தானிய அரசு இலங்கைக்குப் பாதுகாப்பாகச் சென்றுவரலாம் என அறிவித்திருந்தது. சசிகரனின் கைது இலங்கைக்குள் நுளைவது இன்னும் பாதுகாப்பற்றது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. சட்டத்தரணிகள் புடைசூழ வாக்குப் பொறுக்கும் அரசியல் நடத்திவரும் தமிழ் அரசியல் வாதிகள் சசிகரனின் கைது தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கவில்லை.

Exit mobile version