Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

Show my money – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேரம் பேசுகிறதா?

இலங்கையில் மகிந்த ராஜபக்சவின் அணிக்கு பாராளுமன்ற உறுப்பினர்களை இணைப்பதற்கான பேரம் 50 கோடி வரை சென்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மகிந்த அணியில் இணையும் ஒரு பாராளுமன்ற உறுப்பினருகு பணத்தோடு இணைப்பாக அமைச்சர் பதவியும் வழங்கப்படுகிறது. இதுவரையில் இணைந்துகொண்ட மூன்று தமிழர்களுக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தனிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாரை ஆதரிப்பது என்ற முடிவிற்கு இன்னும் வந்தாகவில்லை என்கிறது. கூட்டமைப்பு யாருக்கும் வாக்களிக்காவிட்டால் கூட மகிந்த அணிக்குச் சார்பானதாகவே அமையும்.

2009 ஆம் ஆண்டு வெளியான விக்கிலீக்ஸ் கேபிள் ஒன்றில் அமெரிக்கத் தூதரகம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் குறித்து வாசிங்கடனுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் குறிப்பிட்ட செய்தி நினைவுகூரத் தக்கது. சம்பந்தன், பணத்தைப் பெற்றுக்கொள்வதிலேயே எப்போதும் குறியாக இருப்பார் எனக் குறிப்பிடும் மின்னஞ்சலின் தலையங்கம் Show my money என்று குறிப்பிடப்பட்டிருந்து. கொழும்பு ரெலிகிராப் இத்தகவலை விக்கிலீக்ஸ் இலிருந்து பெற்று வெளியிட்டிருந்தது. பண பேரத்திற்காகவே ஜனாதிபதித் தேர்தலில் எந்த முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்திக்கொண்டிருப்பதாக அத் தகவல் மேலும் தெரிவித்தது.

இதுவரை முடிவெடுக்காத ஒரே கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற வகையில் பண பேரம் திரை மறைவில் இடம்பெறுகிறதா என்ற கேள்விகள் எழுகின்றன. இறுதிக்கட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களி விற்பனைப் பெறுமானம் அதிகரிக்கும் என்பதை ‘சாணக்கியன் சம்பந்தன்’ உறுதியாக அறிந்து வைத்திருப்பார்.

WikiLeaks: TNA leader is a “show-me-the-money" man

Exit mobile version