ஆந்திராவில் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களையும் பலமான இராணுவ நிலைகளையும் கொண்டிருந்த மாவோயிஸ்டுக்கள் இப்போது பழங்குடி மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றுள்ளனர். மாவோ முன்வைத்த மக்கள் யுத்தப் பாதையை முன்னெடுப்பதகக் கூறும் மாவோயிஸ்டுக்கள் இராணுவ நடவடிக்கைகளையே பிரதான அரசியல் தந்திரோபாயமாகக் கொண்டுள்ளனர்.
நக்கசல்கள் என்று அறியப்படும் மாவோயிஸ்டுக்கள் ஒன்பதாயிரம் பயிற்றுவிக்கப்பட்ட கெரில்லாப் போராளிகளைக் கொண்டுள்ள்னர். இந்தியாவின் அரைவாசிப் பகுதியான 28 மானிலங்களின் எல்லைக் கிராமங்களில் மாவோயிஸ்டுக்கள் போராடிவருகின்றனர்.
மக்கள் அணிதிரட்டப்படு போராட்டத்திற்குத் தயாராகும் தற்காப்பு யுத்தத்திற்கு முன்பாகவே மாவோயிஸ்டுக்கள் முன்னேறித் தாக்கும் இராணுவத் தந்திரோபாயம் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படுவதுண்டு.
ஆந்திர மாநில அரசுடன் மாவோயிஸ்டுக்கள் நடத்திய யுத்த நிறுத்தம் 2005 ஆம் ஆண்டில் முறிவடைந்தது. பேச்சுவார்த்தைக்கான இடைக் காலத்தை ஆந்திர அரசு தனது சிறப்பு அதிரடிப் படைகளை பலப்படுத்துவதில் பயன்படுத்திக்கொண்டது. 2005 இற்குப் பின்னர் ஆந்திரக் காடுகளிலிருந்து மாவோயிஸ்டுக்களை வெளியேற்றும் இராணுவ நடவடிக்கையில் சிறப்பு அதிரடிப்படை வெற்றிகண்டது.
இச் சிறப்பு அதிரடிப்படையே தமிழகத்திலிருந்து சென்ற கூலித் தொழிலாளர்களை போலித் தாக்குதல் ஒன்றில் கொலை செய்துள்ளது. கொலைகளில் நீண்டகால அனுபவமுள்ள அதிரடிப்படை மாவோயிஸ்டுக்களை வெளியேற்றிய பின்னர் இயற்கை வழங்களைச் சூறையாடும் மாபியாக்களின் அடியாள் படை போன்று செயற்படுகிறது.
நேற்று 60 சிறப்பு அதிரடிப்படையினர் மீது மாவோயிஸ்டுக்கள் தாக்குதல் நடத்தினர். அரச தரப்பு 7 பேர் மட்டுமே கொல்லப்பட்டுள்ளனர் என அறிவித்தாலும் உயிரிழந்தவர்கள் தொகை அதிகமாக இருக்கலாம் என மாற்றுத் தரப்புக்கள் தெரிவிக்கின்றன. தாக்குதலில் அதிரடிப் படையினரிடமிருந்து ஆயுதங்களும் வெடிமருந்துகளும் மாவோயிஸ்டுக்களால் கைப்பற்றப்பட்டுள்ளன. கொல்லப்பட்டவர்களுள் அதிரடிப் படை கொமாண்டர் சங்கர் ராவ், தலைமை அதிகாரி ரோகித் சோரி, மேஜர் பக்ஹெல் ஆகியோரும் அடங்குவர். உள்துறை அமைச்சர் ரஞ்சித் சிங் தலைமையில் தாக்குதலைத் தொடர்ந்து அவசரக் கூட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டது. சுஷ்மா சுவராஜ், அருன் ஜெட்லி உட்பட பலர் பிரதான அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.