Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஜெயலலிதாவின் மரணத்தின் மர்மம் சாமானியர்களின் வாழ்வுரிமையை அச்சுறுத்துகிறது!

Jeya_Sasiசீ.ஐ.ஏ உலகத் தலைவர்களுள் நூற்றுக்கணக்கானவர்களைக் கொன்று போட்டிருக்கிறது. அரசியல்வாதிகள், ஜனநயகவாதிகள், தேசியவாதிகள், கம்யூனிஸ்டுக்கள், ஏகாதிபத்திய எதிர்பாளர்கள் என அமெரிக்க ஏகபோக அரசின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்குப் பலியானவர்கள் பலர். முக்கிய அரசியல் தலைவர்கள் பலர் அமெரிக்காவின் எல்லைக்குள்ளேயே கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஜோன் எப். கென்னடி, மார்ட்டின் லூதர் கிங் போன்றோர் உட்பட அமெரிக்க உளவுத்துறை கொலை செய்தவர்கள் பலர். அமெரிக்காவில் உச்ச அதிகாரத்திலிருக்கும் முதலாளிகளின் கட்டளைக்குக் கீழேயே பெரும்பாலான கொலைகள் நடந்தேறியுள்ளன.
பிரித்தானியாவில் அண்மைக்காலக் கொலைகளுள், டேவிட் கெலி என்ற அரசியல்வாதியை அந்த நாட்டின் உளவுத்துறையான எம்.ஐ.5 கொலை செய்தமைக்கான ஆதாரங்கள் ஆங்காங்கு வெளியாக விவாதங்களின் பின்னர் நிறுத்தப்பட்டன.
இந்தியாவில் ராஜீவ் காந்தியின் கொலையின் பின்னணியில் இந்திய அரசியல்வாதிகள் மற்றும் உளவுத்துறை செயற்பட்டதற்கான ஆதாரங்கள் சில வெளியாகியிருந்தன.
அதன் பின்னர் ஜெயலலிதாவின் மரணம் கொலை என்பதற்கான மர்மம் நிறைந்த பல ஆதாரங்கள் வெளியாகின்றன. ஆதாரங்களை முன்வைத்துக் கேள்வி கேட்பவர்கள் மிரட்டப்படுகின்றனர்.
பிரித்தானியாவில் அண்மைக்காலக் கொலைகளுள், டேவிட் கெலி என்ற அரசியல்வாதியை அந்த நாட்டின் உளவுத்துறையான எம்.ஐ.5 கொலை செய்தமைக்கான ஆதாரங்கள் ஆங்காங்கு வெளியாக விவாதங்களின் பின்னர் நிறுத்தப்பட்டன.
ஜெயலலிதாவின் மர்மம் நிறைந்த வாழ்க்கையும், ஆட்சியும் அதிகாரமும் அவரே தேடி இணைத்துக்கொண்ட சசிகலா போன்ற மாபியாக்களின் இணைந்திருந்தது.
தமிழகத்தில் பேரம் பேசும் வலிமையுள்ள அரசியல் கட்சியாக பாரதிய ஜனதா மாற்றமடைவதற்கு அங்குள்ள இரண்டு பெரும் கட்சிகளில் ஒன்றை அழிப்பது தேவையானதாக இருந்தது
தன்னைச் சுற்றியுள்ள உறவுகளை வெறும் காசு பணம் மற்றும் நுகர்வு சார்ந்த ஒன்றாகவே கருதிய ஜெயலலிதா, தன்னைச் சுற்றி உருவாக்கிய மாபியாக் கும்பல் இந்துத்துவ பயங்கரவாதிகளால் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுவது கருத்தில் கொள்ளப்படவேண்டியது.
ஜெயலலிதா போன்றவர்களைக் கொன்று போட்டுவிட்டு அதனை மக்களிடமிருந்து மறைப்பது இத்தனை இலகுவானது என்றால், சாமனியர்களின் நிலை?
நவ காலனீயத்திலிருந்து அரசியல் கொலைகளையும் இந்திய அதிகாரவர்க்கம் செவ்வனே உள்வாங்கி வைத்திருக்கிறது.

Exit mobile version