Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கை அரசின் கொலைப்படைகளுக்கு பிரித்தானியா வழங்கும் பயிற்சி தொடரும்

Gota_graces_STFஇலங்கை அரச பயங்கரவாதத்திற்கு ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் ஏனைய கொலைக் கருவிகளையும் மட்டுமல்ல நேரடி ஆலோசனைகளையும்  எழுபதுகளின் ஆரம்பத்திலிருந்து வழங்கிவருகிறது பிரித்தானிய அரசு.

தவிர, தமிழர்களின் தொலைக் கிராமங்களை அழித்து மனிதப் பிணங்களைத் தெருவோரத்தில் வீசியெறிந்த எஸ்.ரி.எப் என்ற கொலைப் படைகளைப் பயிற்றுவித்ததும் பிரித்தானியக் காலனியாதிக்க நாடே..

இலங்கைக் போலிஸ்படைகளுக்கு 2007 ஆம் ஆண்டிலிருந்து பிரித்தானியாவின் ஸ்கொட்லாந்து யார்ட் பயிற்சி வழங்கி வருகிறது. வன்னி இனப்படுகொலைகளின் போது பிரித்தானியப் அதிகாரிகள் இலங்கை இன அழிப்பிற்கு ஆலோசனை வழங்கினர்.

இலங்கை அரசபடைகள் கற்றுக்கொண்ட நாலாம் மாடிக் கலாச்சாரம் பிரித்தானியாவிலிருந்தே கற்பிக்கப்பட்டது. பயிற்சி வழங்குவதற்கான உடன்படிக்கை இந்த மாதம் இறுதிக்குள் நிறைவிற்கு வருகிறது. அதனைப் புதுப்பிக்கப் போவதாக ஸ்கொட்லாந்து யார்ட் அறிவித்துள்ளது.

ஈழப் போராட்டத்தை அழித்து ஆயிரமாயிரம் மக்களை இரத்தத்தால் குளிப்பாட்டிய மாபியாக் கும்பல்கள் நடத்தும் சூதாட்டத்தில் இடையே பிரித்தானியாவின் இரட்டைவேடம் தொடர்கிறது.

Exit mobile version