Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சம்பூர் கடற்படை பயிற்சி நிலையம் அகற்றப்படுகிறது: இலங்கை அரசின் நாடகம்

Sampoor-Commissionedகொழும்பில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியளார்கள் சந்திப்பின்போது கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்படையினரின் பொறுப்பில் கடற்படையினருக்கான பயிற்சி நிலையம் அமைந்திருந்த 237 ஏக்கர் காணியும் அந்தக் காணிகளின் உரிமையாளர்களான இடம்பெயர்ந்துள்ள மக்களிடம் திருப்பிக் கையளிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்திய அரசின் சம்பூர் அனல் மின் நிலையத் திட்டத்திற்காக பத்தாயிரம் ஏக்கர் காணி சுவீகரிக்கப்பட்டுள்ளது. சம்பூர் பிரதேசம் முழுவதையும் மக்கள் வாழமுடியாத வெப்ப வலையமாக மாற்றும் இத் திட்டம் இலங்கை அரசின் கண்துடைப்பு நடவடிக்கையே.

இந்திய அரசினதும், இந்தியப் பல்தேசிய நிறுவனங்களினதும் நலன்களுக்காக உருவாக்கப்பட்ட சம்பூர் அனல் மின் நிலையம் சம்பூரை வெறுமைப்படுத்தும். இது தொடர்ப்பாக பல்வேறு ஆய்வுகள் வெளியாகியுள்ளன. கடற்படைப் பயிற்சி முகாம் அகற்றப்படும் அதேவேளை திருகோணமலை கடற்படைத்த்ளம் அகற்றப்பட மாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பூர் அனல் மினிலையத்திற்கு எதிரான மக்களின் போராட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் நோக்கத்துடன் பயிற்சி முகாம் அகற்றப்படவுள்ளது.
பொதுவாக இலங்கை அரசின் ஊதுகுழல்களாக மாறியுள்ள ‘தேசியப் பிழைப்பு’ ஊடகங்கள் சம்பூர் அனல் மின்னிலயத்தின் ஆபத்துக்குறித்து கருத்துத் தெரிவிக்காத அதேவேளை கடற்படை பயிற்சி முகாம் அகற்றப்படுவதைப் பாராட்டுகின்றன.

Exit mobile version