Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

போர்க்குற்ற அறிக்கையைத் திரை மறைவில் அழிக்கும் மங்கள சமரவீர்: காணொளி ஆதாரம்

SG Meets Minister of Foreign Affairs of the Democratic Socialist Republic of Sri Lankaமகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவதற்கு தேர்தல் பிரச்சார நிதி வழங்கிய பன் கீ மூனை இலங்கையின் வெளி நாட்டமைச்சர் சந்தித்தார். அவ்வேளையின் ஐ.நாவின் மனித உரிமை ஆணையகத்தால் தயாரிக்கப்பட்ட அறிக்கை அவரிடம் கையளிக்கப்பட்டதா என இன்னசிட்டி பிரஸ் கேள்வியெழுப்பியுள்ளது.

அவர்கள் இருவரும் சந்தித்துக்கொண்ட வேளையில் மேசையில் காணப்படும் ஆவணம் அறிக்கையா என இன்னசிட்டி பிரஸ் சந்தேகம் தெரிவித்துள்ளது. நேற்று இருவரும் சந்தித்துக்கொண்ட போது கைத் தொலைபேசியில் இரகசியமாக எடுக்கப்பட்ட காணொளியொன்றை இன்னசிட்டி பிரஸ் தனது யூ ரியூப் தளத்தில் வெளியிட்டுள்ளது.

இறுதிக்கட்ட இனவழிப்பில் சரணடைவு நாடகத்தை நடத்திய முக்கிய போர்க்குற்றவாளியான பாலித கோகண வெளி நாட்டமைச்சர் மங்கள சமரவீரவின் பின்னால் காணப்படுகிறார். தவிர இக் காணொளியில் ராஜபக்சவின் மற்றொரு ஊதுகுழலான பிரசாத் காரியவாசமும் காணப்படுகிறார்.

கொலையாளிகளின் இச்சந்திப்பு நியோயோர்க் ஐ.நா அலுவலகத்தில் நடந்து முடிந்த கையோடு அறிக்கை விடுத்த மங்கள சமரவீர, போர்க்குற்ற அறிக்கையைக் காலம் தாழ்த்துமாறு வேண்டுகொள் விடுத்தார். திரை மறைவில் நடைபெற்ற நாடகத்தை வெளியுலகிற்கு எப்படியெல்லாம் மொழிபெயர்க்கிறார்கள்?

ராஜபக்சவின் தேர்தல் நிதியாக பல மில்லியன்கள் பணத்தை வழங்கிய பன் கீ மூன் இலங்கை சென்ற காலத்தில் மங்கள சமரவீரவும் மகிந்த ராஜபக்சவின் தேர்தல் வெற்றிக்காக உழைத்துக்கொண்டிருந்தார்.

மகிந்த ராஜபக்சவிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மங்கள சமரவீர பிரதான பாத்திரம் வகித்தார்.

மகிந்த ராஜபச்கவிற்கு 11 வருடங்கள் பன் கீ மூனின் தொடர்பிருப்பதைப் போன்றே மங்கள சமரவீரவும் தொடர்பிலிருந்தார்.

அமெரிக்காவின் இரண்டு அடியாட்களான பன் கீ மூனும், மங்கள சமரவீரவும் ஒரு தேசிய இனத்தின் அவலங்களை ஐ.நா அலுவலகத்தில் அழிக்கும் காட்சி:

 

மேலதிக வாசிப்பிற்கு:

ராஜபக்சவை ஆட்சியில் அமர்த்த பான் கீ மூன் நிதி வழங்கினார்

Exit mobile version