Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பிரித்தானியப் பாராளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில்…

Russel brand and ed milibandபிரித்தானியாவில் பாராளுமன்றத்திற்கான தேர்தல் நெருங்கும் நிலையில் எதிர்க்கட்சி பிரதம வேட்பாளர் எட் மிலிபாண்ட் ரசல் பிரண்ட் என்ற நடிகரைச் சந்தித்தார். பாராளுமன்ற வழிமுறை ஊடாக ஜனநாயகத்தை நிலை நாட்ட முடியாது என்றும். இன்று உலகில் ஜனநாயகம் எனக் கூறப்படுவது பல்தேசிய வர்த்தக நிறுவனங்களில் நலனுக்கானது என்றும் ரசல் பிராண்ட் பிரச்சாரம் செய்துவருகிறார். தான் இதுவரை வாக்களிக்கவில்லை எனவும் புரட்சி ஒன்றின் ஊடான புதிய ஜனநாயகம் ஒன்று தேவை என்றும் ரசல் பிரண்ட் வெளிப்படையாகவே கூறிவருகிறார்.

முதலாளித்துவ ஜனநாயகத்தின் தோலை உரித்துக்காட்டிவரும் ரசல் பிரண்டிற்கு சமூக வலைத்தளங்களில் 10 மில்லியன் விசிறிகள் இருக்கின்றனர். அதே வேளை எட் மிலிபாண்டின் தொழிற்கட்சிக்கு அரை மில்லியன் தொடர்பாளர்கள் மட்டுமே உள்ளனர்.

இளைய சமூகத்தின் மத்தியில் ரசல் பிராண்டின் கருத்துக்களுக்கு ஆதரவு பெருகிவருவதும், உழைக்கும் மக்களின் கதாநாயகனாக ரசல் பிராண்ட் உருவாகிவருவதும் வாக்குப் பொறுக்கும் மிலிபாண்ட் போன்ற அரசியல்வாதிகளின் கண்களை உறுத்தின. ரசல் பிராண்டின் ஆதரவாளர்களைக் குறிவைத்து எட் மிலிபாண் நடத்திய உரையாடலின் பின்னர் ரசல் பிராண்டிற்கான ஆதரவு பெருகியுள்ளது.

சரிந்துவிழும் முதலாளித்துவ அரசியலுக்கு எதிராக ரசல் பிரண்ட் இன் கருத்துக்கள் மக்களின் பெரும்பாலனவர்கள் மத்தியில் மாபெரும் சக்தியாக உருவாகிவரும் நிலையில் பிரித்தானியாவில் பிந்தங்கிய நாகரீகமடையாத புலம்பெயர் தமிழ் அரசியல் தலைமைகள் வாக்குப் பொறுக்கிகளின் அடிமைகள் போன்று தமிழ்ப் பேசும் மக்களின் உரிமைக்கான போராட்டத்தைக் காட்டிக்கொடுக்கின்றன.

நேர்மையான மக்களுக்காகக் குரல்கொடுக்கும் ரசல் பிரண்ட் போன்ற நூற்றுக்கணக்கானவர்களைத் தமிழ் மக்களின் அரசியலிலிருந்து அன்னியப்படுத்தி முள்ளிவாய்க்காலில் அவர்கள் அழியக் காரணமாயிருந்தவர்களும் இவர்களே.

ரசல் பிரண் – எட் மிலிபாண்ட் உரையாடல்:

Exit mobile version