Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பிரித்தானியாவில் வீடற்றவர் தொகை 30 வீதத்தால் அதிகரித்துள்ளது

sleepingroughபிரித்தானியாவில் நிரந்தரமாக உறைவிடம் இல்லாதோர் தொகை கடந்த வருடத்தில் மட்டும் 30 வீதத்தால் அதிகரித்துள்ளது. 2009- 2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது வீடற்றவர்களின் தொகை 36 வீதத்தால் அதிகரித்துள்ளது. உலகைச் சுரண்டிக்கொழுகும் பல்தேசியப் பெரு நிறுவனங்களின் பிரதிநிதி டேவிட் கமரனின் ஆட்சி மக்களைத் தெரு முனைவரை இழுத்து வந்திருக்கிறது.

275000 ஏழைகள் வீடற்றவர்களாகவும் அவசர வீட்டுத் தேவை உடையவர்களாகவும் 2014/2015 ஆண்டில் அறிவிக்கப்பட்டுள்ளனர். இப் புள்ளிவிபரம் மிகவும் குறைவான மதிப்பீடு மட்டுமே என என்ற தன்னார்வ நிறுவனம் தெரிவிக்கிறது. இத் தொகை மேலும் பல மடங்கு அதிகமாகக் காணப்படுவதற்கான சாத்தியங்களிருப்பதாக என்ற தன்னார்வ நிறுவனம் தெரிவித்துள்ளது.

டேவிட் கமரனின் பழமைவாதக் கட்சியின் புதிய வரிகளும் சட்டங்களும் வீடற்றவர் தொகையை மேலும் பல மடங்கு அதிகமாக்கலாம் என பல்வேறு அமைப்புக்கள் எச்சரித்துள்ளன. இலாப வெறிக்காகவும், மூலதனச் சுரண்டலுக்காகவும் உலகம் முழுவதையும் போர்க்களமாக்கும் ஏகாதிபத்திய அரசுகள் தமது நாட்டின் எல்லைக்குள்ளேயே மக்கள் மீது நடத்தும் இத் தாக்குதல்கள் முதலாளித்துவத்தின் தவிர்க்கமுடியாத வீழ்ச்சி விரைவுபடுத்தப்படுவதை முன்னறிவிக்கின்றது.

மக்களின் அடிப்படைத் தேவைகளான நீர். நிலம், உணவு, உறைவிடம் போன்ற அனைத்தையும் ஒரு சில பல்தேசிய வியாபார நிறுவனங்களின் நேரடிக் கட்டுப்பாட்டிற்கு உட்படுத்தும் நடவடிக்கை மிகத் தீவிரமாக ஏகாதிபத்திய அரசுகளின் துணையோடு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. டேவிட் கமரனின் பிரித்தானிய அரசின் வீட்டுரிமைச் சட்டம் திட்டமிட்ட நிலப்பறிப்பு நடவடிக்கைக்கான முன்னறிவிப்பாக பிரித்தானியா எங்கும் பரந்து வாழும் ஜனநாயக முற்போக்கு சக்திகளால் கருதப்படுகின்றது. சமூக வீட்டுத் திட்டத்தை பல்தேசிய வியாபார நிறுவனங்களிடம் கையளித்து அப்பாவி மக்களை அந்த நிறுவனங்களில் தங்கியிருக்கும் அடிமைகளாக மாற்றும் இத்திட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் பிரித்தானியா முழுவதும் நடைபெற்று வருகின்றன.

Exit mobile version