Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

புலிகள் அமைப்பின் போர்க்குற்றத்தைக் காரணம் காட்டி நிராகரிக்கப்படும் அரசியல் தஞ்சக் கோரிக்கைகள்

LTTEதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து செயற்பட்ட காரணத்தால் போர்க்குற்றம் சுமத்தப்பட்டு மேலும் சிலருக்கு அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 19.070.2015 இனியொருவின் தகவல்களின் அடிப்படையில் பிரித்தானியாவில் தமிழர் ஒருவருக்கு புலிக்ள் இயக்கத்தில் செயற்பட்ட காரணத்தால் போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டு அனுமதி நிராகரிக்கப்பட்டிருந்தாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இத்தகவலைத் தொடர்ந்து இனியொருவைத் தொடர்புகொண்ட மேலும் இரண்டு அகதிக் கோரிக்கையாளர்கள் தமது அரசியல் தஞ்ச விண்ணப்பம் புலிகள் போர்க்குற்றம் மேற்கொண்டதாக நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

பிரச்சாரப் பிரிவில் இணைந்து செயற்பட்டதாகத் தெரிவித்துள்ள ஒருவருக்கு குழந்தைப் போரளிகளை புலிகள் அமைப்பு இணைத்துக்கொண்தாகவும், பிரச்சாரப்பிரிவு குழந்தைகளை இணைத்துக்கொண்டதாகவும் தெரிவித்து விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

மற்றொருவருக்கு புலிகள் அமைப்பின் இறுதிக்கட்டத்தில் கட்டாய ஆட்சேர்ப்பில் ஈடுபட்டதாக விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்துமே புலிகள் அமைப்பின் போர்க்குற்றங்களை முன்வைத்தே நிராகரிக்கப்பட்டுள்ளது.

சர்வதேசச் சட்டங்களின் அடிப்படையிலேயே இப் போர்க்குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளதாக நிராகரிப்புக் கடிதத்தில் பிரித்தானிய அரசின் உள்துறை அமைச்சகம் குறிப்பிடுகிறது.

இது தொடர்பாக பிரித்தானியத் தமிழ் அமைப்புக்கள் மௌனம் சாதிக்கின்றன.

சர்வதேசம் என்று தமிழ் அமைப்புக்கள் குறிப்பிடும் அமெரிக்கா, பிரித்தானியா போன்ற ஏகாதிபத்திய நாடுகள் இலங்கை அரசைத் தண்டிக்கப்போவதாக மக்களை ஏமாற்றிப் பிழைப்பு நடத்தும் அமைப்புக்கள் முன்னை நாள் அப்பாவிப் போராளிகள் தண்டனைக்கு உட்படுத்தப்படும் போது மௌனம் சாதிக்கின்றன.

பிரித்தானியாவில் தமிழ்த் தேசியம் வளர்ப்பதாக ஊடக வியாபாரம் நடத்தும் தனி நபர்கள் இது தொடர்பான செய்திகளைக் கூட வெளியிடுவதில்லை.

இன்றும் இலங்கையில் பாராளுமன்றம் செல்வதற்காக மக்களை வாக்களிக்கக் கோரும் கட்சிகள் சர்வதேசத்தின் துணையுடன் விசாரண நடத்தப்போவதாகக் கூறுகின்றனர்.

சர்வதேசம் என்று இவர்கள் கூறும் கொலை அரசுகளிடம் போராட்டம் முழுமையாக காட்டிக்கொடுக்கப்பட்டு ஒப்படைகப்பட்டுள்ளது. புலம்பெயர் அமைப்புக்களும், இலங்கைப் பாராளுமன்ற தமிழ் அரசியல் கட்சிகளும் இணைந்து நடத்திய இந்த அழிவில் பல அப்பாவிப் போராளிகள் பாதிக்கப்படுவது தவிர்க்கமுடியாதாகிவிட்டது. மிக நீண்ட காலத்திற்கு தமிழ்ப் பேசும் மக்களின் தன்னுரிமைக்கான போராட்டம் பின் நோக்கி நகர்த்தப்பட்டுள்ளது.

Exit mobile version