Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கையில் ஏற்பட்ட கிளர்ச்சிக்கு இந்திய உளவுத்துறையே காரணம் : ராஜபக்ச

Mahinda-Rajapaksaஇலங்கையில் வன்னி இனப்படுகொலையைத் தலைமை தாங்கிய மகிந்த ராஜபக்ச பல்வேறு படுகொலைகளுக்குப் பொறுப்பானவர். பேரினவாதத்தைப் பயன்படுத்தியே மக்களின் உடமைமைகளைச் சூறையாடிய மகிந்த குடும்பம் மைத்திரிபால அரசின் கீழ் மகிழ்ச்சியாக வாழ்கின்றது. எந்த அச்சமுமின்றி ஆதரவாளர்கள் புடைசூழ மகிந்த தனது அரசியலுக்கு மீள் வடிவம் கொடுக்க ஆரம்பித்துள்ளார்.

மேற்கு ஏகாதிபத்தியங்களாலும் இந்திய அரசாலும் ஆட்சியிலமர்த்தப்பட்ட மகிந்த ராஜபக்ச என்ற கொலையாளி, அவர்களாலேயே ஆட்சியிலிருந்து தற்கலிகமக அகற்றப்பட்ட பின்னர் தனது போலி ஏகாதிபத்டிய எதிர்ப்பை முன்வைக்கிறார்.

பாகிஸ்தானில் வெளியாகும் ஆங்கில அச்சு ஊடகமான டௌன் இற்கு ஆதரவாளர்கள் புடைசூழ அழகிய இருக்கைகளில் அமர்ந்து மகிந்த நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார். இலங்கையைப் போன்றே பாகிஸ்தானிலும் கிளர்ச்சி ஏற்படுவதற்குப் பின்னணியில் இந்திய உளவுத்துறை செயற்படுவதாக மகிந்த வெளிப்படையாக தனது நேர்காணலில் குற்றம் சுமத்தினார்.

மல்லிகா ஹமீட் சித்திகி என்ற டௌன் இதழின் ஊடகவியலாளரிடம் ஐரோப்பாவும், அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் நமது நண்பர்களில்லை என்று வேறு தெரிவித்திருக்கிறார்.

ராஜபக்சவைக் காப்பாற்றி வாழவைக்கும் இந்த நாடுகளுக்கு எதிராக அவரே பேசுவது ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களை அழிப்பதற்கான தந்திரோபாய நடவடிக்கை என்பதை மக்கள் புரிந்து கொள்ள ஆரம்பித்துள்ளனர்.

கிழக்கில் முஸ்லீம்களும் வடக்கில் தமிழர்களும் சர்வதேசச் சக்திகளால் தவறாக வழிநடத்தப்படுகின்றனர் என நேர்காணலில் மேலும் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version