தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது அமெரிக்க ஏகாதிபத்திய அணி என்ன சொல்லுகிறதோ அதனை இலங்கை நடைமுறைப்படுத்துவதற்கான முகவர்களின் கூட்டு என்பதில் சந்தேகங்கள் இல்லை. இவ்வாறான ஏகாதிபத்திய முகவர்களின் கூட்டு சுரண்டலுக்கான வெளியை அகலத் திறந்துவிடும்.
மைத்திரி-ரனில் அரசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இலங்கையை ஒட்டச் சுரண்டுவதற்கான அனைத்தையும் திட்டமிடு மேற்கொள்ளும். இங்கு கூட்டமைப்பிற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மாற்றாக முளைத்தால் அது மேலும் அழிவுகளை ஏற்படுத்தும் என்பதை மக்களும் புரிந்துவைத்திருக்கிறார்கள்.
மைத்திரி-ரனில் அரசின் ஜனநாயக முகம் நீண்ட காலத்திற்கு நீடிக்காது. இன்றுள்ள ஜனநாயக வெளியைப் பயன்படுத்திக்கொண்டு மக்களை அணிதிரட்டி பலமான மக்கள் சக்தியாக உருவாக்குவதெ ஒவ்வொருவர் முன்னும் உள்ள கடமை. இது நீண்டகல வேலைத்திட்டம். அதனை தேர்தல் வரும் போது ஒரு சில மாதங்களுக்குள் செய்துவிட முடியாது. தவிர, சிங்கள, முஸ்லீம் மலையக மக்கள் மத்தியில் பிரிந்து செல்லும் உரிமைக்கான ஆதரவை ஒன்றிணைந்த போராட்டங்கள் ஊடாகவே பெற்றுக்கொள்ள முடியும்.
அமெரிக்க அணி போர்க்குற்ற விசாரணையைக் கூட நடத்தவேண்டிய தேவை இனிமேல் அற்றுபோய்விட்டது. தமது நேரடித் தரகர்களை இலங்கை முழுவதும் தேர்தல் ஊடாக விதைத்துள்ள அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் எஞ்சியுள்ள கடமை இனிமேல் அழிப்பைத் தீவிரப்படுத்துவது மட்டுமே.