வேதாந்தா போன்ற நிறுவனங்களும் அவை சார்ந்த நபர்களும் ரஜனி போன்றவர்களின் தொடர்பு வட்டத்தில் எப்போதுமே இருந்திருக்கிறார்கள். இவ்வாறான பல்தேசிய நிறுவனங்களுடன் இவர்களுக்கு இருக்கும் தொடர்பு மக்களுடனான இவர்களின் தொடர்பைவிட நெருக்கமானது. இவர்கள் மக்களுக்காக பேசுவார்கள் என எதிர்பார்ப்பது அபத்தமானது.
ரஜனிகாந்தின் மகள் சவுந்தரியா ரஜனிகாந் 2014 ஆம் ஆண்டிலிருந்து ஈரோஸ் இன்டர்நாஷனல் என்ற பல் தேசிய படத்தயாரிப்பு நிறுவனம் ஒன்றின் இயக்குனராகப் பதவி வகித்தார். 2017 ஆம் ஆண்டில் தனது தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியைத் துறந்த சவுந்தரியா ரஜனிகாந் பதவியிலிருந்த காலத்தில் அந்த நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவர் நரேஷ் சந்ரா என்பவர்.
பல்வேறு அரச பதவிகளை வகித்து ஓய்வு பெற்ற நரேஷ் சந்ரா, ஈரோஸ் இன் இயக்குனர் பதவியோடு, தூத்துக்குடி படுகொலைகளி பின்னணியில் செயற்பட்ட வேதாந்தாவின் இயக்குனராகவும் பதவி வகித்தார்.
2017 ஆம் ஆண்டு மரணித்த நரேஷ் சந்ராவிற்கு அஞ்சலி செலுத்திய வேதாந்தாவின் தலைவர் அனில் அக்ரவால் அவரின் காலத்தில் வேதாந்தா தனது சந்தைப்படுத்தும் மூலோபாயத்தை புதிய வழிகளில் மாற்றிக்கொண்டதாகக் குறிப்பிடுகிறார்.
தவிர உச்ச நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டிற்கு தடை உத்தரவைக் கோரிய Animal Welfare Board of India (AWBI) இன் தூதுவராகவும் சவுந்தரியா பதவிவகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தூத்துக்குடி சென்று திரும்பிய ரஜனிகாந்த ஜல்லிக்கட்டுப் போராட்டம் சமூகவிரோதிகளால் வன்முறைக்கு உள்ளானது எனவும் குறிப்பிட்டிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.
ஆதாரம்:
http://erosplc.com/?page_id=513
https://www.outlookindia.com/newsscroll/vedanta-chairman-expresses-grief-over-naresh-chandras-demise/1095948
https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Soundarya-Rajinikanth-quits-Eros/articleshow/47512943.cms
https://timesofindia.indiatimes.com/city/chennai/Jallikattu-supporters-burn-portraits-of-Soundarya-Rajinikanth-ask-her-to-dissociate-with-Animal-Welfare-Board-of-India/articleshow/54424377.cms