Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஊழல் குற்றங்களில் கூட ராஜபக்ச குடும்பம் தப்பித்துகொள்வதன் பின்புலம்…

Mahinda_Rajapaksaமகிந்க ராஜபக்ச, கோத்தாபய ராஜபக்ச, சிராந்தி ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோரைக் கைது செய்வதற்குரிய ஆதாரங்கள் காணப்படாலும் சட்ட மா அதிபர் திணைக்களம் அதனைத் தடுப்பதாக இலங்கை ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. இவர்களின் ஊழல் குற்றங்களில் சுனாமி நிதிய ஊழலும் அடங்கும். ராஜபக்சவின் ஊழலுக்கும் மேற்கு ஏகாதிபத்திய அரசுகளுக்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. குறிப்பாக 2004 ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டு வன்னிப் படுகொலை நடத்தப்பட்ட காலம் வரை ராஜபக்சவின் ஊழல்கள் அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் இந்திய அரசுகளின் துணையோடே நடத்தப்பட்டன. 2009 இற்குப் பின்னர் ராஜபக்ச அரசு தேவையற்ற நிலையில் மேற்கு ஏகாதிபத்திய அரசுகள் தெரிந்தெடுத்த மனிதரே மைத்திரிபால சிரிசேன.

ராஜபக்சவின் சுனாமி நிதிய ஊழலில் ஐ.நாவின் செயலாளர் பன் கீ மூன் இற்கு நெருங்கிய தொடர்பிருப்பதான ஆதாரங்கள் வெளியாகின. பன் கீ மூனின்டம் பணம் பெற்றுக்கொண்டதாகவும் அதனைத் தேர்தல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தியதாகவும் சண்டேலீடர் 2005 ஆம் ஆண்டில் ஆதரங்களை வெளியிட்டிருந்தது.

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன இன்னும் அனைத்து நிறைவேற்று அதிகாரங்களும் உடைய மனிதர். ஊழல் குற்றங்களைத் தண்டிப்பதற்கும் மைத்திரி தனது அதிகாரங்களைப் பயன்படத்த சட்டத்தில் அனைத்து வழிமுறைகளும் உண்டு. மேற்கு ஏகாதிபத்தியங்களின் இன்றைய முகவரான மைத்திரி ராஜபக்சவைத் தண்டிப்பது என்பது அவருடன் செயற்பட்ட மேற்கு நாடுகளையும் வெளிக்கொண்டுவருவதாகவே அமையும். இந்த நிலையில் சட்டமா அதிபரைக் காரணம் காட்டியும், ரனிலைக் காரணமாக முன்வைத்தும் ராஜபக்சக்களைப் பாதுகாப்பது வெற்று நாடகமா என்ற சந்தேகங்கள் பல்வேறு தரப்புக்களால் தெரிவிக்கப்படுகின்றது.

2004 ஆம் ஆண்டிலிருந்து 2006 ஆம் ஆண்டு வரை தென்கொரியாவின் வெளிநாட்டு அமைச்சராகப் பதவிவகித்த பன் கீ மூன் ராஜபக்சவை வெற்றிபெறச் செய்வதற்காக அமெரிக்க அரசின் அடியாளாகச் செயற்பட்டார்.

2004 ஆம் ஆண்டு சுனாமி அழித்துத் தணிந்திருந்த காலத்தில் தென் கொரியாவின் வெளி நாட்டமைச்சராகவிருந்த பன் கீ மூன் இலங்கைக்குப் பயணம் ஒன்றை மேற்கொள்கிறார். பன் கீ மூனின் வருகையுடன் மகிந்த ராஜபக்ச ஹெல்பிங் ஹம்பாந்தோட்ட என்ற உதவி நிதியத்தை ஆரம்பிக்கிறார்.

பான் கீ மூன் ராஜபக்சவுடன் உலாவந்த அதேவேளை,, அந்த நிதியத்திற்கு இலங்கைக்கான தென்கொரிய தூதுவர் நிதி வழங்குகிறார். பல மில்லியன்கள் பெறுமதியான இந்த நிதியை ராஜபக்ச களவாடுகிறார். பின்னதாக இதுவே ராஜபக்சவின் 2005 ஆம் ஆண்டு வெற்றிக்கான தேர்தல் பிரச்சார நிதியாகப் பயன்படுத்தப்பட்டது.

கொரிய அரசினால் வழங்கப்பட்ட நிதி தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் ராஜபக்ச மறைத்து அழித்துவிட்டர். இதுதொடர்பாக சண்டேலீடர் ஊடகம் பிரதம மந்திரி ராஜபக்சவைக் கேள்வியெழுப்பிய போது பான் கீ மூன் இடமிருந்து நிதி பெற்றுக்கொண்டதை ஒப்புக்கொள்ளும் ராஜபக்ச அது குறித்த விபரங்களை வெளியிட மறுக்கிறார். தனது செயலாளர் லலித் வீரதுங்கவைக் கேட்குமாறு தப்பிக் கொள்கிறார்.

2007 ஆம் ஆண்டு பன்கீ மூன் ஐ.நாவின் செயலாளராகப் பதவியேற்க ராஜபக்ச இலங்கையின் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக இனப்படுகொலையைத் திட்டமிட்டு நடத்துகிறார்.

ராஜபக்ச அரசிற்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் கொடுக்கப்பட்ட வேலை 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தோடு நிறைவிற்கு வர அமெரிக்க்காவின் புதிய அடியாட்படை ஆட்சியைக் கைப்பற்றிக்கொண்டது.

இப்போது ஊழல், தண்டனை,போர்க்குற்ற விசாரணை என்ற தலையங்கங்களில் காலம் கடத்தப்படுகிறது. மைத்திரிபால அரசிற்கு எதிரான அணி ஒன்று இலங்கையிலும் உலகிலும் இல்லை. புலம்பெயர் நினைவஞ்சலி அமைப்புக்கள் இவற்றையெல்லாம் கண்டுகொள்வதில்லை.

http://www.thesundayleader.lk/20050703/spotlight.htm

Exit mobile version