தேசிய வாதம் என்பது ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பிற்கு எதிராக உழைக்கும் மக்களின் தலைமையில் ஏனைய மக்கள் பிரிவினரை ஒன்றிணைக்கும் கருத்தாக உருவாகமலிருந்தால், சமூகத்தில் மேல் நிலையிலுள்ள சில பணம் படைத்தவர்களின் பயன்பாட்டிற்கனதாக மாறிவிடும்.
பிரித்தானியாவில் நடைபெற்ற ஒலிம்பிக் நிகழ்வின் போது தீவிரமடைந்த ஆங்கில தேசியவாதம், கோக்கோ கோலா போன்ற பல்தேசிய நிறுவனங்களின் உற்பத்திய சந்தைப்படுத்துவதற்குப் பயன்பட்டது. பிரித்தானியாவின் தேசியவாதக் கட்சியான ஐக்கிய ராஜ்ய சுதந்திரக் கட்சி (UKIP) வெளி நாட்டுக் குடியேற்றவாசிகளுக்கு எதிராக தேசியவாதத்தை முன்வைத்து வருகிறது. வெளி நாட்டவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் பிரித்தானியாவில் அதிகரித்துள்ளன. கல்வி, வேலை வாய்ப்பு போன்றவற்றில் வெளி நாட்டவர்கள் நிறவாத அடிப்படையில் புறக்கணிக்கப்படுகின்றனர்.
பிரான்சில் தேசிய முன்னணி (FN) என்ற நிறவாதக் கட்சி இன்று பிரதான கட்சிகளில் ஒன்றாகிவிட்டது. நாசிக் கருத்துக்களில் கணிசமான மக்கள் தொகையினர் ஏற்றுக்கொள்ளும் அவமானம் பிரான்சில் நிறைவேறியிருக்கிறது.
பிரித்தானியாவில் பேர்மிங்காம் பகுதியில் வெள்ளை இனத்தவர்களால் தாக்கப்படும் காணொளி வெளியாகி மனிதாபிமானிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.
இந்த தாக்குதலை சுற்றி இருக்கும் பொதுமக்கள் யாரும் தடுக்காமல் வேடிக்கை பார்க்கின்றனர்.