Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சுற்றாடல் கிரிமினல் ஐங்கரநேசனின் காட்டிக்கொடுப்பு நடவடிக்கைக்கு எதிராக சபையில் கேள்வி

ayngaranesanயாழ்ப்பாணத்தின் ஒரு பகுதிய நஞ்சாக்கிய பல்தேசிய மாபியா நிறுவனத்தின் நேரடி அடியாள் போன்று செயற்பட்ட வட மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் போலி நிபுணர் குழு ஒன்றை நியமித்து நிறுவனத்தைக் காப்பாற்ற முயற்சித்தமை தெரிந்ததே. எம்.ரி.டி வோக்கஸ் என்ற சுற்றுச் சூழல் மாபியா நிறுவனம் சுன்னாகம் பகுதியிலுள்ள நீரையும் நிலத்தையும் நஞ்சாக்கிய அவலம் முள்ளிவாய்க்கால் அழிவின் பின்னான மிகப்பெரும் அழிவு நடவடிக்கையாகும். இந்த நிறுவனத்திற்கு எதிராகக் குரல்கொடுத்த பெரும்பாலான பாராளுமன்ற அரசியல்வாதிகள் விலைகொடுத்து வாங்கப்பட்டுள்ளனர்.

நிறுவனத்திற்கு எதிராகவும், நீரைச் சுத்திகரிக்கக் கோரியும் போராட்டங்கள் நடத்திய அரசியல் கட்சிகள் அனைத்தும் இன்று மூச்சுக்கூட விடுவதில்லை. இந்த நிலையில் வட மாகாண சபையின் அனுமதியின்றி, சபையின் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் ஆதரவுடன் போலி நிபுணர் குழு ஒன்றை அமைத்து நீர் மாசடையவில்லை என ஐங்கரநேசன் நிறுவனத்தைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டார்.

உலக அளவில் சுற்றுச்சூழல் குற்றமாகக் கருதப்படும் இச்செயல் தொடர்பாக மல்லாகம் நீதிமன்றத்தில் கடந்த வாரம் ஐங்கரநேசனிடம் கேள்வியெழுப்பப்பட்ட போது, தனக்கும் நிபுணர் குழுவிற்கும் தொடர்பில்லை என வட மாகாண சபையின் மீது பழி சுமத்திவிட்டு ஐங்கரநேசன் தப்பிக்கொண்டார்.

இன்டர்போல் நிறுவனம் ஐங்கரநேசனிலும் குறைவான குற்றமிழைத்தவர்கள் பலரை உலகம் முழுவதும் தேடிவரும் நிலையில் உள்ளூர் நீதிமன்றத்திற்கு வட மாகாண சபை முழுவதையுமே காட்டிகொடுக்கும் செயலில் ஐங்கரநேசன் ஈடுபட்டார்.

இது தொடர்பாக வட மாகாண சபையின் ஆளும்கட்சி உறுப்பினர் ச.சுகிர்தன் அவைத் தலைவர் சீவிகே.சிவஞானத்தை நோக்கி பின்வரும் கேள்விகளை முன்வைத்தார்.

-நிபுணர்குழுவை வட மாகாண சபையின் கீழ் அமைத்தவர்கள் யார்?

-நிபுணர் குழுவின் அறிக்கை சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டதா?

இக் கேள்விகள் எதற்கும் அவைத் தலைவர் பதிலளிக்கவில்லை.

திட்டமிட்ட சுற்றுச் சூழல் கிரிமினல் வலைப்பின்னலின் ஒரு பகுதியாக வட மாகாண சபை முழுவதுமே மாறி வருகிறதா என்ற சந்தேகங்கள் பல்வேறு தரப்புக்கள் மத்தியிலும் எழ ஆரம்பித்துள்ளன.

சுற்றுச் சூழல் குற்றம் தொடர்பாக இன்டர்போல்:

http://www.interpol.int/Crime-areas/Environmental-crime/Environmental-crime

வடமாகாண சபையைக் காட்டிக்கொடுத்த ஐங்கரநேசன் என்ற சுற்றாடல் அழிப்புக் குற்றவாளி

திட்டமிட்ட அழிப்பின் பின்புலம் : நீதிமன்றத்திலிருந்து…

Exit mobile version