Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஐ.எஸ்.ஐ.எஸ் மீதான ரஷ்யாவின் தாக்குதல்களை 70% பிரித்தானியர்கள் ஆதரிக்கின்றனர்

putcamஐ.எஸ்.ஐ.எஸ் என்ற பயங்கரவாத அமைப்பை உருவாகியது அமெரிக்காவே என ரஷ்ய அதிபர் விளாடிமீர் புட்டின் தெரிவித்துள்ளது ஐரோப்பிய தலைப்புச் செய்திகளை ஆக்கிரமித்துக்கொண்டது. ரஷ்யாவில் நடைபெற்ற கருதரங்கு ஒன்றில் பெருமளவிலான அமெரிக்கப் ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசிய புட்டீன் நேரடியாக அமெரிக்காவைக் குற்றம் சுமத்தினார்.

டேவிட் கமரனின் பழமைவாதக் கட்சி ரஷ்ய அரசு மீதான அவதூறுப் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் அதே வேளை, சிரியாவில் ரஷ்ய அரசின் தாக்குதல்களை 70 வீதமான பிரித்தானியர்கள் ஆதரிப்பதாக கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. அமெரிக்க –

பிரித்தானிய அரசுகளுக்கு ரஷ்யாவிற்கும் இடையேயான முறுகல் நிலை அதிகரித்துள்ள நிலையில் புட்டீனின் தாக்குதலுக்கு பிரித்தானிய மக்கள் வழங்கியுள்ள அங்கீகாரம், ஆளும் பழமைவாதக் கட்சியின் தோல்வி என கருத்துக் கணிப்பை நடத்திய எக்ஸ்பிரஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மாற்று ரஷ்ய ஆக்கிரமிப்பு அல்ல. உலகம் முழுவதையும் இரத்த வெள்ளமாக்கும் அமெரிக்காவின் அரசியலுக்கு எதிரான காத்திரமான மாற்று இல்லாத நிலையில் ரஷ்யா போன்ற நாடுகளை மக்கள் ஆதரிக்க வேண்டிய நிலைக்கு வந்தடைந்துள்ளனர்.

ரஷ்யாவின் புதிய நடவடிக்கைகள் உலகில் ஒரு ஜனநாயக இடைவெளியை ஏற்படுத்தும் என பல ஜனநாயக முற்போக்கு சக்திகளின் நம்பிக்கையாகவுள்ளது.

Exit mobile version