டேவிட் கமரனின் பழமைவாதக் கட்சி ரஷ்ய அரசு மீதான அவதூறுப் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் அதே வேளை, சிரியாவில் ரஷ்ய அரசின் தாக்குதல்களை 70 வீதமான பிரித்தானியர்கள் ஆதரிப்பதாக கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. அமெரிக்க –
பிரித்தானிய அரசுகளுக்கு ரஷ்யாவிற்கும் இடையேயான முறுகல் நிலை அதிகரித்துள்ள நிலையில் புட்டீனின் தாக்குதலுக்கு பிரித்தானிய மக்கள் வழங்கியுள்ள அங்கீகாரம், ஆளும் பழமைவாதக் கட்சியின் தோல்வி என கருத்துக் கணிப்பை நடத்திய எக்ஸ்பிரஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மாற்று ரஷ்ய ஆக்கிரமிப்பு அல்ல. உலகம் முழுவதையும் இரத்த வெள்ளமாக்கும் அமெரிக்காவின் அரசியலுக்கு எதிரான காத்திரமான மாற்று இல்லாத நிலையில் ரஷ்யா போன்ற நாடுகளை மக்கள் ஆதரிக்க வேண்டிய நிலைக்கு வந்தடைந்துள்ளனர்.
ரஷ்யாவின் புதிய நடவடிக்கைகள் உலகில் ஒரு ஜனநாயக இடைவெளியை ஏற்படுத்தும் என பல ஜனநாயக முற்போக்கு சக்திகளின் நம்பிக்கையாகவுள்ளது.