சிலி நாட்டில் கடந்த ஒரு வருடமாக நடைபெற்றுவரும் அரசிற்கு எதிரான போராட்டம் அரசின் புதிய சட்டங்களைத் தொடர்ந்து புதிய கட்டத்தை தொட்டுள்ளது. இன்று பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன. ஆயிரக்கணக்கானவர்கள் படுகாயமடைந்தும், 30 பேர்வரை உயிரிழந்தமர் என்றும் போலிஸ் அறிக்கை கூறுகிறது.
அமெரிக்காவில் பொஸ்டன்னகரில் ரம்ப் எதிர்ப்புப் போராட்டம் முதலில் ஆதரவாளர்கள் மோதலாக மாற்றினர் பின்பதாக பொலிஸ் – ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இடையேயான மோதலாக மாற்றமடைந்தது.
தமிழகத்தில் மக்கள் அதிகராம் திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளது. உத்திரபிரதேசத்தில் நடைபெற்றுவரும் பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக நடத்தப்பட்ட இப் போராட்டத்தில் மக்கள் அதிகாரம் சார்பில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர்.
கோரோனா அச்சத்தைப் பயன்படுத்தி மக்கள் விரோத அரசுகள் உலகம் முழுவதும் தமது அதிகாரத்தைப் பலப்படுத்தியும் கொள்ளையை நிறுவனமாக்கியும் வருகின்றன. மக்கள் வீடுகளிலிருந்து வெளியேறிப் போராட்டங்களை நடத்திவருகின்றனர். புதிய ஒடுக்குமுறை புதிய அதிகாரத்திற்கன போராட்டத்திற்கு மக்களைத் தயார்படுத்துகிறது