Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம் தடை செய்யப்பட்டது! : தொடரும் போராட்டங்கள்

“ஒரு மொட்டைக் கடுதாசியின் பேரில் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மாணவர் அமைப்பான அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்தின் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி ஐ.ஐ.டி நிர்வாகத்திற்கு உத்தரவிடுகிறது”
“ஒரு மொட்டைக் கடுதாசியின் பேரில் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மாணவர் அமைப்பான அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்தின் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி ஐ.ஐ.டி நிர்வாகத்திற்கு உத்தரவிடுகிறது”

இந்திய பார்ப்பனீய மோடி பாசிச அரசு தெற்காசியாவின் அபாயம். ஹிடலர் முசோலீனி போன்ற மனிதகுலத்தின் விரோதிகளால் ஆட்கொள்ளப்பட்டதாகக் கூறும் இந்துத்துவ வெறியை அடிப்படையாகக் கொண்டு தோற்றுவிக்கபட்ட பாரதீய ஜனதாவின் பிரதமர் மோடி இன்று பல் தேசிய நிறுவனங்களின் அடியாள். இந்தியாவை அன்னியர்களுக்கு விற்பனை செய்யும் தரகரர். ஐ.ஐ.ரி நிறுவனத்தில் செயற்பட்டுவரும் அமைப்பான அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம் மோடி அரசின் தலையீட்டில் தடை செய்யப்பட்டது. மாணர்வகளின் அமைப்பான வாசகர் வட்டத்தைக் கூடத் தடை செய்யும் மோடி அரசு பயங்கரவாதி ஹிட்லரின் படத்தோடு பொது வெளியில் கூட்டம் நடத்த சீமான் போன்ற சமூகவிரோதிகளுக்கு அனுமதி வழங்கப்படுகின்றது.

பாசிச மோடி அரசுக்கு ஒத்தூதும் சீமான் பெரியார் தமிழனல்ல என்பதால் எதிர்ப்பதும், ராஜபக்சவின் வியாபாரப் பங்காளிகளான லைக்கா மற்றும் வைகுண்டராசன் என்பவர்கள் தமிழர்கள் என்று ஆதரிப்பதும் தற்செயலானவை அல்ல.

மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் நேரடித் தலையீட்டின் பெயரில், சென்னை ஐ.ஐ.டியில் செயல்பட்டு வரும் மாணவர் அமைப்பான அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம் தடைசெய்யப்பட்டு மாணவர்களின் குரல்வளை நெரிக்கப்பட்டது.

தடைக்கு எதிராக இன்று சென்னையில் போராட்டங்கள் நடைபெற்றன. அவை தொடர்பான விபரங்கள்:

திருச்சி திருவரம்பூரில் உள்ள NIT யில் 02-06-2015 அன்று காலை 10.30 மணியளவில் மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகளான புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகியோர் இணைந்து முற்றுகை போராட்டம் நடத்தின. தோழர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

போராட்டங்கள் தொடர்பாகக் அவற்றை ஒழுங்கு செய்த மக்கள் கலை இலக்கியக் கழகம் கீழ் வருமாறு தெரிவிக்கின்றது:

“இங்கே நாட்டு மக்கள் தாங்கள் வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்காக கலெக்டர் அலுவலகம், நீதிமன்றம் என அரசு உறுப்பின் ஒவ்வொரு கதவுகளையும் மனு மேல் மனுபோட்டு தட்டியும் பதில் கிடைக்காமல் இருக்கிற பொழுது ஒரு மொட்டைக் கடுதாசியின் பேரில் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மாணவர் அமைப்பான அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்தின் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி ஐ.ஐ.டி நிர்வாகத்திற்கு உத்தரவிடுகிறது. ஏற்கனவே சென்னை ஐ.ஐ.டி மறுகாலனியாதிக்கத்திற்கு சேவை செய்யும் மேட்டுக்குடி வர்க்கங்களுக்கான கல்வி நிலையமாக இருந்துவரும் வேளையில் சமூக பாசிசக் கொள்கைகள் மாணவர்களை உந்தித் தள்ளி போராட வைக்கிறது.

இதன் மூலம் மாணவர்களை அரசியலில் ஈடுபடக்கூடாது எனக் கூறுகின்றது மோடி அரசு. இன்றைய மாணவர்கள் நாளைய எதிர்காலம் என்றால் எதிர்காலம் பற்றியும் அரசியல் பற்றியும் தெரிந்துகொள்வதை தடுப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது இல்லையா ?

மாணவர் அமைப்பு தடை செய்யப்பட்டதை கண்டிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் புரட்சிகர அமைப்புகள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டங்கள், முற்றுகை போராட்டங்கள் நடத்தி வருகின்றோம்.

அதன் ஒரு பகுதியாக திருச்சி திருவரம்பூரில் உள்ள NIT யில் 02-06-2015 அன்று காலை 10.30 மணியளவில் மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகளான புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகியோர் இணைந்து முற்றுகை போராட்டம் நடத்தின. தோழர்களை காவல்துறையினர் கைது செய்தனர்”
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
திருச்சி, பேச: 8056905898

திருச்சி சட்டக் கல்லூரி வளாகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை ஐ.ஐ.டி-யில் செயல்பட்டுவரும் அம்பேத்கர்-பெரியார் வாசிப்பு வட்டம் ( APSC ) என்ற மாணவர் அமைப்பு தடை செய்யப்பட்டதை கண்டித்தும், தடையை நீக்கக் கோரியும் திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்கள் சார்பாக புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி கிளை அமைப்பாளர் தோழர்.சுந்தர் அவர்களின் ( RSYF ) தலைமையில் கல்லூரி வளாகம் முன்பு இன்று (02-06-2015) காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசின் சர்வாதிகாரப் போக்கை கண்டித்து மாணவர்கள் முழக்கங்கள் எழுப்பி, மோடியின் உருவப்படத்திற்கு செருப்பு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

செய்தி:
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
சட்டக்கல்லூரி, திருச்சி

RSYF ஐ.ஐ.டி முற்றுகை: போலீசு தாக்குதல்

நூற்றுக்கணக்கான போலிசு படை சுற்றியிருந்தாலும் செங்கொடிகள் சூழ தோழர்களின் முழக்கங்கள் விண்ணதிர ஒலித்தன. ஆர்ப்பாட்டத்தின் படங்களும், சுவரொட்டிகளும் பரவட்டும். பார்ப்பனிய பாசிசம் ஒழியட்டும்!

ன்று காலை சரியாக 11.30 மணியளவில் அம்பேத்கர் – பெரியார் வாசகர் வட்டத்தின் (APSC) சார்பில் ஐ.ஐ.டி வளாகத்தின் உள்ளே ’கஜேந்திரா சர்க்கிள்’ அருகிலும், ஐ.ஐ.டி வாயிலிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

பின்னர் கஜேந்திரா சர்க்கிளிலிருந்து சென்று ஐ.ஐ.டி-யின் வாயிலில் ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்தனர். மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திக்கொண்டிருந்த அதே நேரத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளார் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகளை சார்ந்த தோழர்கள் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன் தலைமையில் ஐ.ஐ.டி வாயிலை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

காலை 8 மணி முதலே மிகவும் பரபரப்பாகவும் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டதாகவும் பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்த போலிசுக்கு இன்று இடி மேல் இடியாக வந்திறங்குமென்ற செய்தி பாவம் அவர்களுக்குத் தெரியவில்லை.

காலையிலேயே வந்து குவிந்துவிட்ட ஊடகவியலாளர்களால் நிரம்பி வழிந்தது ஐ.ஐ.டி வளாகம். ஆனால் வாயிலில் வைக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் கேமராக்கள் அனைத்துமே போலிசுக்காரர்களின் முகத்தைத் தான் படம் பிடிக்க முடிந்தது. ஐ.ஐ.டி வாயிலை அடைத்துக் கொண்டும், வருவோர் செல்வோர்களை எல்லாம் மிரட்டியும், ஏகத்துக்கும் தனது செல்வாக்கை பயன்படுத்தி அச்சுறுத்திக் கொண்டிருந்தது போலிசு.

எவ்வளவோ முயற்சித்தும் ஊடக நண்பர்களால் உள்ளே செல்ல முடியாததால், ஒரு கட்டத்தில், கல்லூரி வளாகத்தில் அத்துமீறி நுழைந்ததோடு மட்டுமல்லாமல், எங்களையும் போக விடாமல் உத்தரவுப் போட்டுக்கொண்டிருக்க, “நீ யார்” என்றும், “இந்த இடத்தில் உனக்கென்ன வேலை” என்றும் போலிசை கேட்டதும், பதில் சொல்ல முடியாமல், “என்னையா கேள்வி கேட்கிறாய்” என்று நேரம் பார்த்து காத்திருந்தது போலிசு படை.

இந்த வாக்குவாதம் முற்று பெறுவதற்குள், அடுத்த பேரிடி போலிசைத் தாக்கத் துவங்கியது. விண்ணதிரும் முழக்கங்களுடன், போர்க்குணத்தோடு ஐ.ஐ.டி வாயிலை நோக்கி முன்னேறியது செஞ்சட்டைப் படை. தட்டி தடுமாறி, கெஞ்சிக் கூத்தாடி என்னெனவோ செய்து பார்த்தும் அசைந்து கொடுக்காததால் தனது காட்டு தர்பாரை அரங்கேற்ற துவங்கியது போலிசு. ஆர்ப்பாட்டம் செய்தவர்கள், ஊடகவியலாளர்கள், பார்வையாளர்கள் என எவரையும் பார்க்காமல் கண்மூடித்தனமான தாக்குதலில் ஈடுபட்டது.

போலிசின் மிரட்டலுக்கும் உருட்டலுக்கும் கிஞ்சித்தும் பயமறியாது, தோழர்கள் ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து நடத்தினர். ஊடகவியாலாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, தோழர்கள் ஏற்றப்பட்ட வேனின் குறுக்கே அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போலிசின் நிலையைத் தான் அப்போது பார்க்க வேண்டுமே, முறுக்கிய மீசையும், முறுக்கேறிய கரமும் தளர்ந்து. அய்யகோ, என் செய்வேன் நான்! என செய்வதறியாது ஊடக நண்பர்களை கை பிடித்து கெஞ்சிக் கூத்தாடி போராட்டத்தை கைவிடச் செய்தனர்.

”அனைத்து சாதியினரும் அர்ச்சரகராக வேண்டும்” என போராடாதவர்கள், ”தில்லை கோயிலை தீட்சிதனுக்கு தாரை வார்க்கும் வரை” வேடிக்கைப் பார்த்தவர்கள் இன்று, “நான் இருக்கிறேன் நான் இருக்கிறேன்” என்ற பாணியில் அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியில் APSC மாணவர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர். APSC மீதான தடை என்பது ஜனநாயகத்தின் குரல் வளையை நெரிப்பதாகவும், கருத்துச் சுதந்திரம் பறிப்பு என்றும் பசப்புகின்றனர் ஓட்டுக் கட்சிகள்.

ஆனால் உண்மையில் இது பச்சையான பாசிச நடவடிக்கை என்றோ, இது இந்துத்துவா கொள்கையை அமுல்படுத்தும் நோக்கிலான நடவடிக்கைகள் என்றோ யாரும் பேசுவதில்லை. இதை அம்பலப்படுத்தி புரட்சிகர அமைப்புகளால் நடத்தப்பட்ட இந்த போராட்டம் ஐ.ஐ.டி வளாகம் முழுவதிலும் எதிரொலித்து, போராடும் மாணவர்களுக்கு உத்வேகம் அளிப்பதாகவும், உழைக்கும் மக்களை சிந்திக்க தூண்டுவதாகவும் அமைந்தது.

வெட்ட வெட்ட வாழை வளர்வதைப் போல, சென்னை ஐ.ஐ.டி-யில் உண்டான தீப்பொறி இன்று மும்பை ஐ.ஐ.டி-யிலும், ஆந்திரா உஸ்மானியா பல்கலைக்கழகத்திலும், டெல்லி நகர வீதிகளிலும் பற்றிப் படர்ந்து கொழுந்து விட்டு எரிகிறது. அணைய விடமாட்டோம் போராட்டத் தீயை!!!

இது பார்ப்பனிய கொடுங்கோன்மைக்கெதிரான பகை. ஈராயிரம் ஆண்டுப் பகை. தமிழகம் முழுவதும், நாடு முழுவதும் பற்றிப் படரச் செய்து பார்ப்பனியத்தை சாம்பலாக்கும் வரை ஒயாது தொடரும் என அறைந்து சொல்வதாக அமைந்தது இந்த ஆர்ப்பாட்டம்.

– புதிய ஜனநாயகம் செய்தியாளர்கள், சென்னை.

மேலதிக தகவல்கள் வினவு இணையத்தளத்தில்

 

Exit mobile version