அதன் அடிப்படையில் ஆர்ப்பாட்டங்களை நடத்தலாமா இல்லையா என்பதை போலிஸ் அதிகாரமே தீர்மானிக்கும் என்பதையும், சட்ட ஒழுங்கிற்கு பாதிப்பில்லாத போராட்டங்கள் என்றாலும், சமூகத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசு கருதினால் போலிசிற்கு அவற்றைத் தடை செய்யும் அதிகாரம் போலிசிற்கு வழங்கப்பட்டுள்ளது. போராட்டங்களில் ஈடுபடும் எவரையும் 10 வருடங்கள் சிறையிலடைக்கலாம் என அச் சட்டம் மேலும் கூறுகிறது.
இச்சட்டத்தின் முதலாவது வாசிப்பு, பெரும்பான்மைப் பலத்துடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்கு எதிராக பிரித்தானியா முழுவதும் போராட்டங்கள் நடை பெறுகின்றன. போராட்டத்தில் ஈடுபடும் மக்களை மிருகத்தனமாக ஒடுக்கும் போலிஸ் படையினர் பொதுமக்களுடன் மோதல்களில் ஈடுபடுகின்றனர். ஆர்பாட்டங்களில் ஈடுபடும் பொதுமக்களை “காடையர்கள்” என பிரித்தானியாவும் உள்துறை செயலாளர் பிரிதி பட்டேல் கூறியிருப்பது, அரசிற்கு எதிரான பெரும் சர்ச்சையை எதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மன்செஸ்டரில் 18 ஆர்ப்பாட்டக்காரர்களை அரசபடைகளை சிறைப்பிடித்துள்ளது. பிரிஸ்டலில் செய்தியாளர் ஒருவரைக் கடுமையாகத் தாக்கியுள்ளது. டெயிலி மிரர் பத்திரிகையை ச் சேர்ந்த அவர் தாக்கப்பட்டது தொடர்பான வீடியோ ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.