Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சிறீதரனின் விச ஊசி தேசியம்!

சுரேஷ் பிரேமச்சந்திரனின் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியில் இணைந்து அதனூடாக கிளிநொச்சியில் வாக்குக்கேட்டு எம்.பி பதவியைக் கையகப்படுத்திக்கொண்ட சிறீதரன் எம்.பியின் எல்லைக்குள் முன்னை நாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகள் கடந்தவாரம் வேலை கேட்டு நடத்திய போராட்டங்கள் ஊடகங்களில் வெளியாகின. சிறீதரனின் அலுவலத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இலங்கை அரசின் கீழ் இயங்கும் சதோச வர்த்தகச் சந்தை அமைந்துள்ளது. கிளிநொச்சியின் ஏ 9 வீதி ஓரத்தில் சோகமாகக் காட்சியளிக்கும் இந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் அனைவரும் சிங்கள சமூகத்தைச் சேர்ந்தவர்கள். தெற்கிலிருந்து சதோசவில் வேலை செய்வதற்கு என்றே கிளிநொச்சியில் குடியேறியுள்ள இவர்களில் பலருக்கு தமிழ் தெரியாது.

வாக்குப் பொறுக்கும் ஒரே நோக்கத்துடன் கிளிநொச்சியின் குறு நில மன்னன் போன்று செயற்படும் சிறீதரனின் குண்டர்படைக்கு அப்பிரதேசத்தின் பலர் அச்சத்திற்கு உப்டடுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் காலங்களில் மக்களை உணர்ச்சிவசப்படுத்தி வாக்கு வங்கியை நிரப்பும் திறமை வாய்ந்த சிறீதரன் இன்று தமிழரசுக் கட்சியின் உறுப்பினர். விச ஊசி விவகாரத்தில், ஊசி ஏற்றப்பட்டு இறந்து போனவர்களின் விபரங்கள் தன்னிடமிருப்பதாகக் கூறிவந்த சிறீதரன் இதுவரை அந்த விபரங்களை வெளியிடவில்லை.

இவை அனைத்திற்கும் மேலாக, சதோச போன்ற நிறுவனங்களில் திட்டமிட்டு அப்பிரதேச மக்களுக்கு வேலை வாய்ப்பு மறுக்கப்படும் போது கூட, தனது காலடியில் கிடக்கும் அந்த நிறுவனம் தொடர்பாகவும் ஏனைய இதுபோன்ற நிறுவனங்கள் தொடர்பாகவும் குறைந்தபட்ச நடவடிக்கைகளைக் கூட சிறீதரன் மேற்கொண்டதில்லை.

Exit mobile version