Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

புஸ்வாணமான விச ஊசி விவகாரம் : புதிய வதந்திக்குத் தயாராகும் விசமிகள்

poinjமுன்னை நாள் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராளிகளை முன்வைத்துப் பிழைப்பு நடத்தும் அரசியல்வாதிகள் சிலர் கட்டவிழ்த்துவிட்ட விச ஊசி வதந்தி இனியொரு வெளியிட்ட ஆதாரபூர்வமான தகவல்களால் பிசுபிசுத்துப்போனது.

விஷ ஊசி விவகாரம் : மரணித்த போராளிகளின் விபரங்களும் பொய்களும்

போராளிகளில் பலரை மரணபயத்திற்கு உட்படுத்திய இந்த வதந்தியின் பின்னணியில் வட மாகாண சபையைச் சேர்ந்த சிலர், சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் ஆகியோர் செயற்பட்டிருந்தனர்.

போராளிகளைக் கண்காணிப்பிற்கு உட்படுத்தும் நோக்கில் வடமாகாண சபையின் விக்னேஸ்வரனும் அவரை இயக்கும் நிமலன் கார்த்திகேயன் குழுவினரும் நடவடிக்கைகளை கடந்த ஏப்பிரல் மாதத்திலிருந்து முடுக்கி விட்டிருந்தனர். போராளிகள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்தி மருத்துவப் பரிசோதனை என்ற பெயரில் அவர்கள் குறித்த தகவல்களைச் சேகரிக்கும் தந்திரோபாயமே விச ஊசி என்ற வதந்தியின் பின்புலம் என்ற சந்தேகங்கள் எழுகின்றன.

இந்த நிலையில் வடமாகணத்தில் இதுவரை மருத்துவப் பரிசோதனையை மேற்கொண்ட புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்படவில்லை என வடமாகண மாவட்ட வைத்தியசாலை விசேட பரிசோதனை வைத்தியர்கள் இன்று கூறியுள்ளனர்.

இதனைத் திரிபு படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் சார்ந்த செய்தி வியாபார இணையம், உள் நாட்டு மருத்துவர்கள் நம்பகத்தன்மையற்றவர்கள் எனப் போராளிகள் தெரிவித்ததாக அடுத்த பொய் ஒன்றைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது.

தடுப்பு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்ட போராளிகளில் இதுவரை மரணித்த ஐந்து போராளிகளின் பெயர் விபரங்களை இனியொரு வெளியிட்ட பின்னரும் கட்டவிழ்த்துவிடப்படும் புதிய வதந்திகளின் பின்னணி முழுமையாக வெளிப்படுத்தப்பட வேண்டும்.

விஷ ஊசி விவகாரம் : மரணித்த போராளிகளின் விபரங்களும் பொய்களும்
வடமாகாண சபையின் பின்னணியில் புலிகளை அழித்தவர்கள்: அதிர்ச்சித் தகவல்கள்!
Exit mobile version