கடந்த செவ்வாயன்று ஸ்பெயினிலிருந்து ஜேர்மனிக்குச் சென்று கொண்டிருந்த விமானம் பிரான்சின் தெற்குப் பகுதியில் விழுந்து நொருங்கியிருப்பது மீண்டும் ஐரோப்பாவை பரபரப்புக்குள் அமிழ்த்தியிருக்கிறது. விமானத்தைச் செலுத்திய உதவி விமானியின் திட்டமிட்ட செயலே விமானம் நொருங்குவதற்குக் காரணம் என அரசுகளின் விசாரணைகள் கூறுகின்றன. இதனை ஊடகங்கள் பரப்புரை செய்ய ஆரம்பித்துள்ளன.
மலேசிய விமானங்கள் மீதான தாக்குதல்களின் பின்னணியில் அமெரிக்க அரசே செயற்பட்டதாக பல ஆதராங்கள் வெளிவந்தன. கோப்ரட் ஊடகங்கள் அவற்றைக் கண்டுகொள்ளாத நிலையில் அவறின் ஆளுமைக்கு உட்பட பெரும்பாலன மக்களுக்கு உண்மை மறைக்கப்பட்டது.
இம்முறை ஜேர்மனிய விமானம் விழுந்து நொருங்கியுள்ளது. அந்த அவலத்தின் பின்னால் அதிகாரவர்க்கங்கங்களில் பங்கு உள்ளதா என்பது தொடர்பான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
ஜேர்மன்விங்ஸ் என்ற நிறுவனம் லுப்தான்சா விமானச் சேவைக்குச் சொந்தமான மலிவு விமானமே விபத்துக்கு உள்ளாகியிருக்கிறது. கடந்த இரண்டு வாரங்களாக லுப்தான்சா விமானிகள் வேலை தொடர்ச்சியான வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். பல்வேறு லுப்தான்சா விமானச் சேவைகள் வேலை நிறுத்தத்தால் பாதிப்படைந்திருந்தன.
விபத்து நடந்த அன்றே ஜேர்மன்விங்ஸ் நிறுவனத்தைச் சார்ந்த பல விமானங்கள் வேலை நிறுத்தத்தால் விமானச் சேவையை இரத்துச் செய்திருந்தன.
ஐரோப்பிய நகரங்களுக்கு இடையேயான மலிவு விமானச் சேவை ஒன்றை வழங்குவதற்கான லுப்தான்சா விமானச் சேவையின் புதிய திட்டத்தின் அடிப்படையில் விமானிகளின் ஊதியத்தைக் குறைக்கும் முயற்சியில் லுப்தான்சா முனைப்புக்காடி வந்தது.
விமான கப்டனை கட்டளை அறைக்குள் நுளையவிடாது அதனை பூட்டிய உதவி விமானி விமானத்தைத் தாழ்வாகப் பறக்கச் செய்து ஆல்ப் பள்ளத்தாக்கில் மோதி விபத்தை ஏற்படுத்தியதாக பிரஞ்சு விசாரணையாளர்களும் லுப்தான்சா அதிகாரிகளும் கூறுகின்றனர்.
ஆன்ரே லூபிட்ஸ் என்ற உதவி விமானியின் வீடு ஜேர்மனியப் போலீசாரல் முற்றுகையிட்டுத் தேடுதல் நடத்தப்படுகின்றது. அமெரிக்க உளவு நிறுவனமான எப்.பி.ஐ விசாரணைகளில் பங்கெடுப்பதாக அறிவித்துள்ளது.
விமானியும் உதவி விமானியும் உளவியல் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே விமானம் செலுத்க அனுமதிக்கபட்டனர் என லுப்தான்சா கூறுகின்றது.