Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பாரிஸ் தாக்குதல் – 160 கொலைகள் – அவசரகால நிலை – அகதிகள் முகாமில் தீ

la-fg-paris-shootingsபாரீஸ் மற்றும் அதன் புற நகர்ப் பகுதிகளில் நடைபெற்ற குண்டு வெடிப்புக்கள் மற்றும் துப்பாக்கிச் சூடுகளின் போது பலர் கொல்லப்பட்டுள்ளனர். குறைந்தது 43 கொலைகள் நடைபெற்றிருக்கலாம் என பிரஞ்சு போலிஸ் தெரிவித்திருந்தது. தவிர, பற்றகலான் அரங்கில் பொதுமக்கள் பணயக் கைதிகளாகப் கொலையாளிகளால் பிடித்து வைக்கப்பட்டிருந்ததனர். அவர்களை பிரஞ்சுப் போலிஸ் விடுதலை செய்யும் முயற்சியில் நூறு பேர்வரை கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பிரான்ஸ் செய்தி இதழான பாரிசியன் தெரிவித்துள்ளது. துப்பாக்கியுடன் குண்டுத் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் ஜிகாதீகள் எனப்படும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் என அனுமானங்கள் தெரிவிக்கபட்டுள்ளன. பிரஞ்சு போலிஸ் 5 ஜிகாதிகள் தாக்குதலில் கொலை செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

பற்றகலான் அரங்கில் இன்னும் பொதுமக்கள் முழுமையாக விடுதலை செய்யப்படவில்லை என பிரஞ்சு நேரம் 14/11/2015 அதிகாலை 00:40 அளவில் அமெரிக்க செய்தி முகவர் நிறுவனம் தெரிவித்தது.
படுகொலைகள் மேலும் அதிகமாகவிருக்கலாம் என சீ.என்.என் தெரிவிக்கிறது.

அரங்கிற்கு அருகாமையில் இரண்டு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளதாக பிரஞ்ச்சுப் போலிஸ் தெரிவிக்கிறது.

பிரஞ்சு பிரதமர் பிரான்சுவா ஒல்லோந் நாட்டின் எல்லைகளை உடனடியாக மூடிவிடுவதாகவும், அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்துவதாகவும் அறிவித்துள்ளார்.

2005 ஆம் ஆண்டு பாரிஸ் இன் புற நகர்ப் பகுதிகளில் நடைபெற்ற எதிர்ப்புப் போராட்ட வன்முறைகளின் போது அப்போதைய ஜனாதிபதி நிக்கொலா சார்கோசி அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தியதன் 10 வருடங்களின் பின்னர் இத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

பிரான்சின் தலைநகர் பாரிஸ் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் நடத்தப்பட்ட இத் தாக்குதல்களின் முழு விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை

சிரியா, மற்றும் நேட்டோ நடுகளின் இராணுவத் தலையீட்டிற்கு உள்ளான நாடுகளிலிருந்து ஐரோப்பாவை நோக்கி வரும் அகதிகளின் ஒரு பகுதித் தங்குமடமாக பிரான்ஸ் திகழ்ந்தது. அகதிகளை ஐரோப்பாவிலிருந்து அகற்றுவதற்கும், நிறவாத-தேசியவாத எழுச்சியை ஏற்படுத்தவும் , எல்லைகளை மூடுவதற்கும், பிரான்சை இராணுவ மயப்படுத்துவதற்கும் இத் தாக்குதல் பயன்படும் என்பதில் சந்தேகங்கள் இல்லை.

பிரான்சின் நிறவாதக் கட்சியான தேசிய முன்னணி என்ற சமூகவிரோதக் கட்சி மூன்றாவது கட்சியாகப் பலம் பெற்றுள்ளது. அமெரிக்க ஊடகங்கள் சில தேசிய முன்னணி தொடர்பான செய்திகளைப் பிரதானப்படுத்தி வெளியிட்டுவந்தன. இத் தாக்குதலின் பின்னர் வெளிநாட்டவர்களுகு எதிரான உணர்வு நாடு முழுவதும் ஏற்படலாம் எனக் கடுதப்படுகின்றது.

தீப்பற்றி எரியும் காலே அகதிகளின் முகாம்

தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள் யார் என்பதை பல் தேசிய வியாபார ஊடகங்களின் செய்திகளுக்கு அப்பால் ஆராய வேண்டும்.

தாக்குதலின் எதிரொலியாக பிரான்ஸ் பிரித்தானிய எல்லையில் அமைக்கப்பட்டுள்ள அகதிகள் முகாமிற்கு தீவைக்கப்பட்டுள்ளது. பிரஞ்சு நிறவாதிகள் இத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

எதிர்கால ஐரோப்பாவின் அரசியல் பிராஸ் நிறவாத அடிப்படைவாதிகளின் எழுச்சியில் ஆரம்பமாகலாம் என்ற அச்சம் ஜனநாயகவாதிகளின் தரப்பில் தெரிவிகப்படுகின்றது.

தாக்குதல் நடைபெற்ற இடங்கள்:

Bataclan concert venue, 50 boulevard Voltaire, 11th district – hostages held
Le Carillon, 18 rue Alibert, 10th district – gun attack
Le Petit Cambodge, 20 rue Alibert, 10th district – gun attack
La Belle Equipe, 92 rue de Charonne, 11th district – gun attack
Near Stade de France, St Denis, just north of Paris – reported suicide attack near venue as France v Germany football match played

Exit mobile version