அப் போராட்டத்தின் மீது பல்தேசிய நிறுவனங்களுக்கு ஆதரவாக இராணுவம் சென்று நிராயுதப்பாணியான தொழிலாளர்கள் மீது துப்பாக்கிப் பிரையோகம் நடத்திற்று.
34 தொழிலாளர்கள் அதே இடத்தில் மாண்டுபோனார்கள். ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்ததனர். அவ்வேளையில் இலங்கையில் சமாதனம் குறித்துப் பேசும் இன்றைய தென்னாபிரிக்க ஜனாதிபதி தங்க வியாபாரம் செய்யும் பல்தேசிய நிறுவனங்களின் ஆலோசகராவிருந்தவர்.
இலங்கையின் பாரளுமன்றத் தேர்தல் முன்னெப்போதும் இல்லாத வகையில் புலம்பெயர் நாடுகளில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியிருந்தன. இவற்றிற்கு மத்தியில் பறை-விடுதலைக்கான குரல் என்ற அமைப்பு மரிக்கானா படுகொலைகளுக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டது.
சுன்னாகம் அனல் மின் நிலையத்தின் ஊடாக அழிக்கப்பட்ட நீருக்கும் நிலத்திற்குமான போராட்டத்தைத் தொடர்ந்து நடத்திவரும் பறை வொயிஸ் ஒப் பிரீடம் என்ற ஈழத் தமிழர்கள் அமைப்பின் பறை முழக்கம் பலரது கவனத்தையும் ஈர்த்தது.
ஆபிரிக்க நாட்டவர்களுடன் ஈழத் தமிழர்களும் இப்போராட்டத்தில் கலந்துகொண்டமை எதிர்காலப் போராட்ட வடிவங்களுக்கான முன்னுதாரணமாக அமைந்தது.