உலகம் முழுவதும் அரசுகள் உழைக்கும் மக்களிடமிருந்து அதிக அளவில் வரியை அறவிட்டு வரும் நிலையில், பெரும் பணம் படைத்தவர்களும், வியாபாரிகளும் அவர்களுக்காகவே தெரிவு செய்யப்பட்ட அரச அதிகாரிகளும் தமது பணத்தை பதுக்கிவைத்தமை இதனூடாக ஆதரபூர்வமாக நிறுவப்பட்டது.
பணப் பதுக்கல் நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் வரிசையில் பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரனின் பெயரும் வெளியாகியிருந்தது.65 இலங்கையர்களின் பெயர்களோடு ஏனைய நாட்டினரது பெயர் விபரங்களும் வெளிவந்துள்ளன. இனக்கொலைக்குப் பின்னான இலங்கையை வறுமை தின்று தீர்க்க அந்த நாட்டின் கொள்ளையர்கள் அரச பாதுகாப்புடன் பணப்பதுக்கலில் ஈடுபட்டுள்ளனர்.
JAFFNA COMMUNICATIONS LTD, JAFFNA CREATIVE CORP.JAFFNA COMMUNICATIONS LTD. ஆகிய நிறுவனங்களும் வெளியான ஆவணங்களில் படியலிடப்பட்டுள்ளன. இவற்றின் உரிமையாளர்கள் மற்றும் மேலதிக விபரங்கள் கிடைக்கப்பெறவில்லை.
சிக்கன நடவடிக்கை என்ற தலையங்கத்தில் பெரும்பாலான நாடுகளில் பொதுச் சேவைத் துறை, இலவசக் கல்வி, இலவச மருத்துவம் போன்ற அனைத்தையும் தனியார் மயப்படுத்தும் அரசுகள் மக்களின் உழைப்பிலிருந்து அதிக வரியை அறவிடுகின்றன. முதலாளித்துவப் பொருளாதாரம் மீளமுடியாத அமைப்பியல் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இன்றைய காலப்பகுதியில் எஞ்சிய அனைத்தையும் சுருட்டிக்கொள்ளும் முயற்சியில் பெரும் பண முதலைகள் ஈடுபட்டுள்ளனர்.