Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

உங்களுக்காக கேரளாவைப் பகைக்க முடியாது : தமிழக இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளர்

சென்னையில் நடந்த தமிழக இளைஞர் காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட மேலிட பொறுப்பாளரும், கேரள மாநிலத்தைச் சேர்ந்தவருமான லிஜூ, முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக இளைஞர் காங்கிரஸ் போராட்டம் நடத்தினால் அதில் நான் பங்கேற்க மாட்டேன். உங்களுக்காக எங்களது மாநிலத்தை நான் பகைத்துக் கொள்ள முடியாது என்று கூறினார்.
தமிழக இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளராக கட்சி மேலிடம் கேரளாவைச் சேர்ந்தவரான அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் லிஜூவை நியமித்துள்ளது.
இந்த நிலையில் நேற்று நடந்த இளைஞர் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் லிஜு கலந்து கொண்டார்.
கூட்டத்தின் இடையே ஒரு நிர்வாகி எழுந்து, கூடங்குளம் பிரச்சினை, முல்லைப் பெரியாறு பிரச்சினை குறித்துப் பேசினார். முல்லைப் பெரியாறு அணை குறித்த போராட்டத்தை இளைஞர் காங்கிரஸார் போராட்டம் நடத்த வேண்டும். அதற்கு லிஜு தலைமை தாங்க வேண்டும் என்றார்.
அதைக் கேட்டதும் சட்டென்று எழுந்த லிஜு,முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில்,எங்களது மாநிலத்தை நான் பகைத்துக் கொள்ள முடியாது என்று கூறினார்.
தொடர்புடை பதிவுகள்:

முல்லைப் பெரியாறு அணை: வரலாறும், உண்மையும்

Exit mobile version